போட்டி நடப்பதற்கு ஒருநாள் முன்பு இந்தியாவிற்கு பேரதிர்ச்சி.. நட்சத்திர வீரர் திடீர் விலகல்!

0
5302

பங்களாதேஷ் அணியுடன் நடக்கும் ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார் முகமது சமி.

நியூசிலாந்து தொடரை முடித்துவிட்டு இந்திய அணி பங்களாதேஷ் சென்று, முதல் கட்டமாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

ஒருநாள் பங்கேற்பதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். அதன் பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டன..

நியூசிலாந்து தொடரின்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் கே எல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி முகமது சமி, ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஒரு நாள் தொடரில் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இத்தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் குணமடையாததால் அவரை எடுக்கவில்லை.

அதேபோல ஆல்ரவுண்டர் ஜடேஜா காயத்தினால் உலக கோப்பையில் விளையாடவில்லை. குணமடைந்து வங்கதேச தொடரில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் வங்கதேச தொடரில் இருந்து விலகி உள்ளார் என தெரியவந்துள்ளது.

பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லாத போது, இடம்பெற்றிருந்த முகமது சமி இந்திய அணியை வங்கதேச ஒருநாள் தொடரில் பந்துவீச்சில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் துரதிஷ்டவசமாக, கையில் காயம் ஏற்பட்டதால் வங்கதேச ஒருநாள் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். காயத்தின் தீவிரம் பற்றி தற்போது வரை இந்திய அணியின் மருத்துவக் குழு தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வெளிவரும் தகவலின் படி, அவர் டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற மாட்டார் என தெரிகிறது.

முதல் ஒருநாள் போட்டி நான்காம் தேதி காலை 11:30 மணியளவில் நடக்க உள்ளது. இன்னும் முழுமையாக ஒரு நாட்கள் கூட இல்லை. அதற்குள் எப்படி மாற்றுவீரரை அறிவிக்க முடியும்?.

ஒருவேளை அறிவித்தால், அவர் வங்கதேசம் வருவதற்கு நான்காம் தேதி காலை ஆகிடும். ஓரிரு மணி நேரங்களில் பயிற்சி இல்லாமல் எப்படி நேரடியாக போட்டியில் அவரை களம் இறக்க முடியும்? என்கிற பல சிக்கல்கள் தற்போது இந்திய அணிக்கு எழுந்துள்ளது. இதை ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் எப்படி கலந்து ஆலோசித்து சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.