பும்ராவிற்கு மாற்றுவீரர் அறிவிப்பு; 3-4 நாட்களில் ஆஸ்திரேலியா செல்கிறார் – வெளியான தகவல்!

0
10616

பும்ராவிற்கு மாற்று வீரர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறார் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஐபிஎல் தொடருக்கு பிறகு காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் சர்வதேச தொடர்களில் இடம்பெறவில்லை. குறிப்பாக, ஆசிய கோப்பை தொடரின்போதும் காயத்தில் இருந்ததால் அதில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

மீண்டும் குணமடைந்து நல்ல உடல்தகுதி பெற்றார். இதன் காரணமாக, டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். டி20 உலக கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியா டி20 தொடரில் பங்கேற்ற விளையாடினார். அதற்கு அடுத்ததாக நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் முதல் போட்டிக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, முதுகு பகுதியில் வலி ஏற்பட்டதால் மருத்துவ குழுவினரை அணுகினார்.

பும்ராவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், குணமடைய சில நாட்கள் எடுக்கும்; முழு பரிசோதனை செய்ய இன்னும் அவகாசம் தேவை என கூறியதால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து மட்டும் விலகினார். உலகக்கோப்பையில் இருப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி திங்கள்கிழமை அன்று பும்ராவின் முழு பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பும்ராவிற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். அவர் குணமடைவதற்கு இன்னும் சில மாதங்கள் தேவை என தெரிவித்ததால், டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலக்கப்பட்டார்.

- Advertisement -

பும்ரா விலகுகிறார் என அறிவிக்கப்பட்ட சில நேரங்களிலேயே, அவருக்கு மாற்று வீரராக யார் இருப்பார்? ஆஸ்திரேலிய மைதானத்தில் டெத் ஓவர்களை வீசுவதற்கு தற்போது பும்ராவுக்கு நிகர் வேறு யார்? என்ற விவாதங்கள் தொடர்ந்து நிலவிவந்தது. ரிசர்வ் வரிசையில் இருந்த முகமது சமி, தீபக் சகர் இருவரில் ஒருவர் மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என்ற கருத்துக்களும் நிலவிவந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடாமல் இருந்த முகமது சமி, தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார் என்றும், தனது உடல் தகுதி பரிசோதனையையும் வெற்றிகரமாக முடித்ததால் பும்ராவிற்கு மாற்று வீரராக இவரை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 3 முதல் 4 நாட்களுக்குள் அவர் ஆஸ்திரேலியாவிற்கு செல்வார் என்று கூறப்படுகிறது.