ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்த சிறந்த ஒரு நாள் அணி – கேப்டன் தல தோனி

0
2651
Shakib and Dhoni

வங்கதேச அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆன ஷகிப் அல் ஹசன் தன்னுடைய சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். ஸ்போர்ட்ஸ்கீடா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளிக்கையில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சிறந்த 11 பேர் கொண்ட அணியை இவர் தேர்வு செய்துள்ளார். சச்சின், கோலி, தோனி போன்ற முக்கிய முன்னணி வீரர்கள் இவரது அணியில் இடம்பெற்றுள்ளனர்.

துவக்க வீரர்கள் – சச்சின் மற்றும் அன்வர்

தனது அணியின் துவக்க வீரர்களாக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க வீரர் சயீத் அன்வரையும் தேர்வு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்கள் அதிக சதங்கள் அதிக அரை சதங்கள் என அத்தனை சாதனைகளையும் தன்வசம் வைத்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். 463 ஆட்டங்களில் 18426 ரன்களை குவித்தவர் சச்சின். அதே போல சயீத் அன்வரும் 247 ஆட்டங்களில் விளையாடி 8824 ரன்களை குவித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக இவர் அடித்த 194 ரன்கள் என்பது கிட்டத்தட்ட சுமார் 13 ஆண்டு காலம் தனி நபரால் ஒருநாள் ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்று சாதனையாக இருந்தது.

- Advertisement -

மிடில் ஆர்டர் – கெயில், கோலி, காலிஸ்

அதிரடி ஆக்ரோஷம் அமைதி என மூன்றும் கலந்த கலவையாக ஷகிப் அல் ஹசன் அணியின் மிடில் ஆர்டர் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் மூன்றாவது இடத்திலும், இந்திய அணி கேப்டன் கோலி நான்காவது இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் காதில் 5வது இடத்திலும் இவரது அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சுமார் 10,480 ரன்கள் அடித்தவர் கிறிஸ் கெயில். அதுமட்டுமல்லாமல் அந்த அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான்.

கோலியை பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. தற்காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டின் ராஜா என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு அனைத்து சாதனைகளையும் வரிசையாக உடைத்துக் கொண்டே வருகிறார் விராட் கோலி. இதுவரை சுமார் 12169 ரன்களை குவித்துள்ளார் மேலும் இவரது ஒரு நாட்டின் சராசரி கிட்டத்தட்ட அறுபதை நெருங்கியுள்ளது. இதுவரை சுமார் நாற்பத்தி 3 சதங்களையும் கூறி ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் விளையாட போகும் தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் காலிஸ் இதுவரை சுமார் 11574 ரன்களை குவித்துள்ளார் ஒருநாள் கிரிக்கெட்டில். கூடவே 273 விக்கெட்டுகளையும் தன்வசப்படுத்தி உள்ளார் காலிஸ்.

விக்கெட் கீப்பர் மற்றும் ஸ்பின் ஆல்ரவுண்டர் – தோனி, ஷகிப்

விக்கெட் கீப்பர் பதவிக்கு பலரும் எதிர்பார்த்த விதமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆன மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார் ஷகிப் அல் ஹசன். லீ வரிசை யில் அதிகமான ஆட்டங்கள் ஆடினாலும் சுமார் 10763 ரன்களை தோனி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் குறித்துள்ளார். அவரது சராசரி 50.51, தல தோனி கேப்டனாக விளங்குவார்.

- Advertisement -

ஆல்ரவுண்டர் இடத்திற்கு தன்னைத்தானே தேர்வு செய்துள்ளார் ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணியின் தூணாக விளங்கியவர் இவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 6600 ரன்களை குவித்துள்ளார். அதோடு சேர்த்து சுமார் 277 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஷகிப்.

சுழற்பந்து வீச்சாளர் – ஷேன் வார்னே, முரளிதரன்

பல்வேறு வீரர்களைப் போலவே ஷகிபும் சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவை தேர்வு செய்துள்ளார். 194 ஆட்டங்களில் 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் வார்னே. கூடவே ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை கொண்ட இலங்கை அணியின் வீரர் முரளிதரனையும் ஷகிப் தேர்வு செய்துள்ளார். 350 ஆட்டங்களில் விளையாடி முரளிதரன் 534 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் – வாசிம் அக்ரம், மெக்ராத்

முரளிதரனுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள பாகிஸ்தான் அணி வீரர் வாசிம் அக்ரமை தனது அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவனாய் ஷகிப் தேர்வு செய்துள்ளார். 356 ஆட்டங்களில் 502 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் வாசிம். மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மெக்ராத் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவர். இவர் 250 ஆட்டங்களில் விளையாடி 381 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஷகிப் அல் ஹசனின் சிறந்த ஒருநாள் அணி – சச்சின், அன்வர், கெயில், கோலி, காலிஸ், தோனி, ஷகிப், வார்னே, வாசிம், மெக்ராத், முரளிதரன்.