பாகிஸ்தான் ஆடுகளம் தொடர்பான சர்ச்சை.. ரமீஸ் ராஜா,  ஆப்ரிடி இடையே மோதல்

0
188

பாகிஸ்தானுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்து அசத்தியது. முதல் நாள் ஆட்டத்தில் 506 ரன்கள் அடித்து சாதனை படைத்தது. பந்துவீச்சுக்கு சாதகமே இல்லாத மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக பல்வேறு தரப்பினும் இருந்து குற்றச்சாட்டும் விமர்சனமும் குவிந்தன.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் ரமீஷ் ராஜா ஆடுகளம் இப்படி செயல்பட்டது வெட்கத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் டெஸ்ட் ஆடுகளம் எப்படி தயார் படுத்த வேண்டும் என்ற சூட்சமம் எனக்கு தெரியவில்லை.ராவல்பிண்டி ஆடுகளம் தமக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

பாகிஸ்தானில் செயற்கையான பீட்சுகளை தயாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் முல்தான் மற்றும் கராச்சியிலும் இதேபோன்றுதான் ஆடுகளம் இருக்கும். முன்பு போல் பந்து இப்போது நன்றாக பவுன்ஸ் ஆவதில்லை. எப்படி நாம் ஆடுகளம் செய்தாலும் பழைய மாதிரி போட்டிகள் நடைபெறுவதில்லை என்று ரமீஸ் ராஜா புலம்பினார். ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஷாகித் ஆப்ரிடி, ரமேஷ் ராஜாவின் பேச்சைக் கேட்டு எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அவர் எப்படி நம்மால் சர்வதேச தரத்திற்கு ஆடுகளத்தை தயாரிக்க முடியாது என்று சொல்லலாம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த கருத்தை தெரிவிக்கலாமா? ரமீஸ் ராஜா சுழல் பந்து பீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும் என சொல்கிறார்.

ஆனால் ராவல்பிண்டியில் எப்போதும் ஆடுகளம் வேகப்பந்து கட்சிக்கு சாதகமாக இருக்கும். நாம் தோற்று விடுவோம் என்பதற்காக ஏன் ஆடுகளத்தை மாற்ற வேண்டும். ஒரு காலத்தில் ராவல்பிண்டி தான் வேகப்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணிக்காக கிடைப்பார்கள். ஆனால் இப்படி ஆடுகளம் இருந்தால் இனி அதுபோன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் வர மாட்டார்கள் என்று சையது அப்ரிடி கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -