உலக கிரிக்கெட்

என் மருமகனையும் பாபரையும்.. எல்லாரையும் நீக்கினது கரெக்டான விஷயம்தான் – ஷாகித் அப்ரிடி ஓபன் பேச்சு

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் உள்பட ஐந்து முக்கிய வீரர்களை நீக்கியது சரியான முடிவு என ஷாகித் அப்ரிடி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் 556 ரன்கள் குவித்தும் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி மற்றும் நசிம் ஷா என நட்சத்திர வீரர்கள் உட்பட ஐந்து வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழு அதிரடியாக நீக்கியது குறிப்பிடத்தக்கது.

நீக்கம் கிடையாது ஓய்வு

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் அசார் மக்மூத் இந்த நட்சத்திர வீரர்களை தாங்கள் நீக்கவில்லை என்றும், அடுத்து நிறைய கிரிக்கெட் வர இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறோம் என்றும் கூறி விளக்கம் கொடுத்திருந்தார்.

இப்படியான நிலையில் பாகிஸ்தான் இந்நாள் வீரர் பகார் ஜமாத் மற்றும் முன்னாள் வீரர் ரமிஷ் ராஜா என பலரும் பாபர் அசாமை அணியை விட்டு நீக்கி இருக்கக் கூடாது என கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில் அணி நிர்வாகம் வித்தியாசமான காரணத்தை கூறி இருக்கிறது.

- Advertisement -

தேர்வுக் குழு எடுத்த முடிவு சரியானதே

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் மேலும் நீக்கப்பட்ட ஷாகின் அப்ரிடியின் மாமாவுமான ஷாகித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழு பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுத்த முடிவு மிகவும் சரியானது என்று கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது “பாபர், ஷாகின் மற்றும் நசீம் மூவருக்கும் பாகிஸ்தான் தேர்வுக் குழு கொடுத்துள்ள ஓய்வை நான் ஆதரிக்கிறேன். இவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு பாகிஸ்தான் நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றவும் மேலும் தொடரவும் பெரிய உதவி செய்யக் கூடியதாக இருக்கும்”

இதையும் படிங்க : ஷமியை நாங்க கூப்பிட மாட்டோம்.. பும்ரா கேப்டனா மட்டுமே இல்லை.. ஆனா எல்லாமா இருக்கார் – கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

“மேலும் வளர்ந்து வரும் திறமைகளை பரிசோதிக்கவும், வருங்காலத்தில் பாகிஸ்தான் அணியின் பெஞ்ச் வலிமையை உருவாக்கவும், பாகிஸ்தான் தேர்வுக் குழு தற்பொழுது எடுத்திருக்கும் முடிவு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts