என்றைக்காவது பிரச்சினைகளை சமாளிக்க முடியாத நிலை வரும் – விராட் கோலியின் பதவி விலகல் குறித்து பாகிஸ்தான் வீரர் அப்ரிடி பேச்சு

0
1379
Shahid Afridi about Virat Kohli

கடந்த சில நாட்களாக நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருக்கும் விஷயம் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஆகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தன்னுடைய கேப்டன் பொறுப்பை விடுவித்துக் கொண்டுள்ளார்.

இத்தனைக்கும் டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறக்கும் போது மற்ற இரண்டு வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக தொடர விருப்பம் தெரிவித்திருந்தார் கோலி. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் தான் விலகுவதாக அறிவித்துள்ளார் கோலி.

- Advertisement -

கேப்டன் கோலியின் இந்த திடீர் முடிவுகளுக்கு பிசிசிஐ தான் காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று பிசிசிஐ அதை மறுத்து உள்ளது. ரோகித் காயமுற்று உள்ளதால் அடுத்து வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

தற்போது கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான அப்ரிடி கருத்துக் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நடந்த ஒரு டிவி நிகழ்ச்சிக்கு அவர் பேசும்பொழுது, கிரிக்கெட்டின் ஒரு கட்டத்தில் கேப்டன்சி கொடுக்கும் அழுத்தத்தை தாங்க முடியாத நிலை அனைவருக்கும் வரும் என்று அவர் பேசியுள்ளார். மேலும் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு கேப்டனாக இருந்து விட்டார் என்றும் தற்போது அவர் தன்னுடைய கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அளவில் மிகவும் வெற்றி வாய்ந்த கேப்டன் யார் என்றால் அது கோலி தான். தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் கேப்டன் பொறுப்பையும் துறந்துள்ள விராட் கோலி, கேப்டன் ஆவதற்கு முன்பு கடந்த 2016 ஆம் ஆண்டு எப்படி கிரிக்கெட்டை ஆட்சி செய்தாரோ அது போல மீண்டும் திரும்பி வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -