மரண யார்க்கர் போட்டு, ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேனை ஹாஸ்பிடல் அனுப்பிய ஷஹீன் அப்ரிடி – வீடியோ!

0
777

பயிற்சி ஆட்டத்தில் சாகின் அப்ரிடி யார்க்கர் வீசிய பந்து எதிரணி துவக்க பேட்ஸ்மேன் காலை பதம் பார்த்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரல் ஆகியுள்ளது.

டி20 உலக கோப்பை தொடரில் தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகள் தற்போது பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் பயிற்சி ஆட்டத்தின் மோதி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்ததாக பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக சசாய் மற்றும் குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். இரண்டு பேரின் விக்கெட்டையும் சாகின் அப்ரிடி வீழ்த்தினார். நட்சத்திர பேட்ஸ்மேன் ஜத்ரான் சற்று நிலைத்து ஆடி 35 ரன்கள் சேர்த்தார். அவரும் சதாப்கான் பந்தில் ஆட்டம் இழந்ததார்.

பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். கேப்டன் நபி நிலைத்து ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார். 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்துவந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, நபி விக்கெட் இழக்காமல் விளையாடி அரை சதம் அடித்தார்.

இவருக்கு பக்கபலமாக நின்ற உஸ்மான் 20 பந்துகளில் 32 ரன்கள் அடித்தார். முகமது நபி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஆக உயர்த்தினார். சாகின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராவ்ப் இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 2.2 ஓவர்களில் 19 ரன்கள் அடித்திருந்தது. திடீரென ஆட்டத்தின் நடுவே மழை குறுகிட்டதால் ஆட்டம் பாதியில் தடைபட்டது. நிற்காமல் பெய்ததால் ஆட்டம் ரத்து ஆனது.

போட்டியின் துவக்கத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது பயங்கரமான யார்க்கர் பந்தை சாகின் அப்ரிடி வீசினார். அதை எதிர்கொள்ள முடியாமல் காலின் பாதத்தில் பட்டு எல்பிடபிள்யு ஆனார் குர்பாஸ். அத்துடன் நிற்கவில்லை. அவருக்கு காலில் அடிபட்டதால் தீவிரமாக வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையும் பெற்று வருவதாக ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகத்தின் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

வீடியோ: