ஹாட்ரிக் எடுத்தால் இந்த 3 இந்திய வீரர்களின் விக்கெட்டை தான் எடுக்க விரும்புகிறேன் – பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி

0
506
Shaheen Afridi

இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது. வழக்கமான இந்திய அணியின் கேப்டன் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் ஒருநாள் அணிக்கு புதிய கேப்டனாக ரோஹித் பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரிலேயே கேப்டனாக வேண்டியது பேர் காயம் காரணமாக அந்த தொடரில் பங்கேற்கவில்லை. அதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரோஹித்துக்கு பதிலாக ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக தோல்வியுற்றதால் கேப்டன் ராகுல் அதிகமாக சமூக வலைதளங்களை விமர்சிக்கப்பட்டார். ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு சுத்தமாக பொருந்த வில்லை என்றும் ரோகித் சீக்கிரம் அணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பலர் கருத்துக்களைக் கூறி வந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.

- Advertisement -

வழக்கமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த கோலி நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற தோல்வியாகும். அதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பையில் தோல்வி பெறாத இந்திய அணி கடந்த டி20 உலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சாஹீன் ஆப்ரிடி அமைந்தார்.

இவர் பந்துவீச்சில் ரோஹித் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து ராகுலையும் இவர் ஆட்டம் இழக்கச் செய்தார். கடைசி நேரத்தில் கோலியையும் ஆட்டமிழக்க வைக்க இந்திய அணி குறைவான ஸ்கோர் மட்டுமே அடிக்க அதை பாகிஸ்தான் அணி எளிதாக விரட்டி வெற்றி பெற்றது. தற்போது ஒரு பேட்டியில் அப்ரிடி தான் நாட்டுக்கட்டையை எடுக்க வேண்டும் என்றால் அதில் மிகச் சிறந்த வீரர்களை அவுட் ஆக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் தேர்ந்தெடுத்துள்ள அந்த மூன்று வீரர்களும் இந்திய வீரர்கள் தான். கடந்த டி20 உலக கோப்பையில் அவர் அவுட்டாக்கிய 3 வீரர்களை தான் இதிலும் தேர்ந்தெடுத்துள்ளார். கோலி ரோகித் ராகுல் ஆகியோரை ஹாட்ரிக் விக்கெட்டாக வீழ்த்தினால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டும் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுவதால் இது நடக்குமா என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்