இந்த பவுலர் பும்ராவுக்கு எந்த வகையிலும் குறைந்தவர் கிடையாது – சல்மான் பட் கருத்து

0
125
Jasprit Bumrah and Salman Butt

இந்திய அணி இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் வெல்ல, ஜஸ்ப்ரீட் பும்ராவின் அபார வேகப்பந்து வீச்சு முக்கியக் காரணமாய் இருந்தது. இந்தப் போட்டியில் 19 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த அதிரடியான பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்தின் டிரன்ட் போல்ட்டை பின்னுக்குத் தள்ளி, ஒருநாள் போட்டிக்கான நம்பர் 1 பந்துவீச்சாளர் என்ற இடத்திற்கு முன்னேறினார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என அவரது மிகச்சிறப்பான பந்துவீச்சு செயல்பாட்டின் மூலம், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தற்போது பும்ராதான் மிகச்சிறந்த பவுலர் என்று கருதப்படுகிறார். தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த செயல்திறனை அவர் வெளிப்படுத்தியதால், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நாகர் ஹூசைன், இந்திய முன்னாள் வீரர் சச்சின் என பல வீரர்கள் அவரை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று புகழ்கிறார்கள்.

தற்போது பாகிஸ்தான் அணி முன்னாள் துவக்க வீரர் ஜஸ்ப்ரீட் பும்ரா மட்டுமல்ல, பாகிஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடியும், பும்ரா அளவிற்கான மிகச் சிறந்த பவுலர்தான் என்று தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்துப் பேசியுள்ள சல்மான் பட் “இருவரும் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள். அவர்கள் பந்துவீசுவதைப் பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவம். மேலும் வேடிக்கையாவும் இருக்கிறது. இருவரும் புதிய பந்தில் பந்துவீசும் பொழுது, எப்பொழுது வேண்டுமானாலும் விக்கெட் விழும் என்கிற மாதிரியே இருக்கிறது. வேறு யார் பந்துவீசும் பொழுது இந்த உணர்வு வருவதில்லை” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய சல்மாட் பட் “ஆனாலும் 21 வயதான ஷாகின் ஷா அப்ரிடி அவர் இப்போது கொண்டிருக்கும் தரத்தில் செயல்படுவது சாதாரணம் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், பும்ரா நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் ஷாகின்ஷா அப்ரிடி பும்ராவுக்கு ஐந்த வருடங்கள் பிறகே சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குள் வந்தார். எனவே இந்த நேரத்தில் இருவரையும் ஒப்பிடக் கூடாது. ஆனால் பும்ரா அளவிற்கு ஷாகின் ஷா அப்ரிடியும் சிறந்த திறனை கொண்டிருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்!