இந்தியாவை பந்தாடிய அலெக்ஸ் ஹேல்ஸை முதல் ஓவரில் போல்டு எடுத்த சாஹீன் அப்ரிடி – வீடியோ இணைப்பு!

0
180

முதல் ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸை போல்டாக்கினார் ஷாஹின் அப்ரிடி. வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மெல்பர்ன் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலபரிட்சை மேற்கொள்கின்றன.

- Advertisement -

டாஸ் பண்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 15 ரன்களும், பாபர் அசாம் 32 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். மிடில் ஓவர்களில் ஷான் மசூத்(38) மற்றும் சதாப்கான்(20) இருவரும் சிறிய நம்பிக்கையை அந்த அணிக்கு கொடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி திணறி வந்தது.

20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெடுகளை இழந்து 137 ரன்கள் அடித்திருந்தது. அதிகபட்சமாக சாம் கரன் மூன்று விக்கெடுக்களையும், அடில் ரஷீத் மற்றும் கிரிஸ் ஜோர்டன் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பட்லர் மற்றும் ஹெல்ஸ் களமிறங்கினர். இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் விக்கெட் இழப்பின்றி இறுதிவரை விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர்.

- Advertisement -

இந்த நம்பிக்கையோடு இப்போட்டியிலும் களமிறங்கினர். ஆனால் முதல் ஓவர் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது என்று கூறலாம். ஷாகின் அந்த ஓவரின் ஆறாவது பந்தில் அலெக்ஸ் ஹேல்ஸை போல்டக்கினார். கடந்த போட்டியில் 86 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற இவர் இம்முறை இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே அடித்து அவுட் ஆகி வெளியேறியது அதிர்ச்சியளித்தது

அதற்கு அடுத்ததாக ஜோஸ் பட்லர் நல்ல துவக்கம் கொடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது வரை 12 ஓவர்கள் முடிவில் 84 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருக்கிறது.