அந்த பவுலர் இல்லை; இந்தியன் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இப்போ ஹாப்பியா இருப்பாங்க – ஓவராக வாய் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!

0
145
Waqar Younis

சாஹின் அப்ரிடி பாகிஸ்தான் அணியில் இல்லாதது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்திருக்கும் என முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் பாகிஸ்தான் அணியை சேர்ந்த சாஹின் அப்ரிடி. இவரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் ஆட்டம் இழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது. அதன் பிறகு அந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரில் நடக்கவிருக்கிறது. துரதிஷ்டவசமாக சாஹின் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. ஜூலை மாதம் இலங்கை அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சாஹின் அப்ரிடி காயமடைந்தார். கணுக்காலில் ஏற்பட்ட காயம் சற்று தீவிரமாக இருந்தது. ஆனால் விரைவாக குணமடைந்து விடுவார் என அதிகாரிகள் கருதி வந்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி இறுதி பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் சாஹின் குணமடைவதற்கு இன்னும் நான்கு முதல் ஆறு வார காலம் தேவைப்படும் என்பதால் அவரால் ஆசிய கோப்பை தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து வரவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் இரண்டிலும் பங்கேற்க முடியாது என தெரிவித்து விட்டனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளிவந்துவிட்டது.

இதனால் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விடுவர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் நக்கல் செய்யும் தொனியில் பேசியுள்ளார். வக்கார் யூனிஸ் தனது ட்விட்டர் பதிவில், “சாஹின் அப்ரிடியின் காயம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியாக இருக்கும். இவரை போன்ற இளம்வீரரை ஆசியகோப்பை தொடரில் கண்டிப்பாக மிஸ் செய்வேன். சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் சாம்ப்.” என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

சாஹின் அப்ரிடி காயம் குறித்து பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் சதப் கான் கூறுகையில், “சமகால கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த பந்துவீச்சாளர் சாஹின். அவரை நாங்கள் மிஸ் செய்வோம். ஆசிய கோப்பையில் அவர் எங்களுடன் இல்லாதது பெருத்த பின்னடைவு தரும். எங்களது இலக்கு உலகக் கோப்பை. அதற்குள் அவர் விரைவில் குணமடைந்து பாகிஸ்தான் அணிக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். சமீப காலமாக மிகவும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறோம். எந்த ஒரு அணியையும் நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறோம். அதுதான் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.