சீனியர் வீரர்களுக்கு ஓய்வு – நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியவை வழிநடத்த போவது இந்த வீரர் தான்

0
266
Virat Kohli Bumrah and Rohit

இந்திய அணி தற்போது உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. தொடர் தொடங்குவதற்கு முன்பு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப் பட்ட அணிகளில் ஒன்றாக இருந்த இந்தியா தற்போது அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவே தடுமாறி வருகிறது. வரிசையாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என இரண்டு பெரிய அணிகளுடன் தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. மீதி இருக்கும் 3 ஆட்டங்களிலும் சிறப்பான வெற்றியைப் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தற்போது இந்திய அணி ஆடி வருகிறது.

ஏற்கனவே இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி இந்த தொடர் முடிந்தவுடன் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார். மேலும் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. இதனால் அடுத்த கேப்டன் மற்றும் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதில் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனால் உலக கோப்பையை விட உலகக் கோப்பைக்கு அடுத்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது இந்திய அணி நிர்வாகம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் வரும் 17ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக இத்தனை நாட்கள் ரசிகர்கள் யாரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரியவந்துள்ளது. முதல் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மேலும் இந்த தொடரில் ரோகித் கோதி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சீனியர் வீரர்கள் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி வந்துள்ளதால் இவர்களுக்கு ஓய்வு நிச்சயம் தேவைப்படுகிறது. அதன் காரணமாக இந்திய அணியை கேஎல் ராகுல் இந்த தொடரில் வழி நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பை நினைத்த வண்ணம் செல்லாவிட்டாலும் வரவிருக்கும் நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.