ஓடிஐ கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படுவாரா ? அல்லது கோஹ்லியே தொடர்வாரா ? – பிசிசிஐ அளிக்கும் விளக்கம்

0
105
Rohit Sharma and Virat Kohli

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது. கடந்த உலகக்கோப்பை தொடருடன் டி20 போட்டிகளில் இருந்து தன்னுடைய கேப்டன் பதவியை விராட் கோலி விடுவித்துக் கொண்டார். இதனால் உலக கோப்பைக்கு அடுத்த நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோகித் கேப்டனாக செயல்பட்டார். அந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. தற்போது குரோனா காரணமாக தென் ஆப்ரிக்க தொடரில் டி20 போட்டிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட முழு தென்னாபிரிக்க தொடருக்கும் விராட் கோலி தான் கேப்டனாக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது இந்த முடிவில் மாற்றம் வரலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகிக்கொண்டது கோலி கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு பல வெளி நாடுகளுக்குச் சென்று தொடர்களை வென்றாலும் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி தொடர் ஒன்று கூட இப்போது வரை வெல்ல முடியவில்லை. சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என மூன்று முக்கிய தொடர்களிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் கோலியின் கேப்டன்சியை மாற்ற வேண்டும் என்று அப்போதைய சில குரல்கள் எழுந்தன.

- Advertisement -

இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது டி20 கேப்டன்சியை ரோகித்திடம் கொடுத்தது போல ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சியையும் ரோஹித்திடம் கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான முடிவை எடுக்க பிசிசிஐ அமைப்பு விரைந்து கூடவுள்ளது. அதன் பின்புதான் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக விராட் கோலியை நீடிப்பாரா அல்லது புதிய கேப்டனாக ரோகித் செயல்படப் போகிறாரா என்பது தெரியவரும்.

தென்ஆப்பிரிக்க தொடருக்கு அனுபவம் வாய்ந்த விராட் கோலி கேப்டனாக இருப்பாரா அல்லது புதிய கேப்டனாக ரோஹித் பொறுப்பேற்பாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.