அரையிறுதி நிலவரங்கள் ; இந்திய அணிக்கு இன்னும் நீடிக்கும் ஆபத்து ; பாகிஸ்தான் அணிக்கு தொடரும் வாய்ப்பு!

0
17285
ICT

பதினாறு அணிகளைக் கொண்டு கடந்த அக்டோபர் பதினாறாம் தேதி முதல் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது!

பிரதான சுற்று இருக்கு நேரடியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய எட்டு அணிகள் தேர்வு பெற்றன.

- Advertisement -

12 அணிகளைக் கொண்டு நடத்தப்படும் பிரதான சுற்றுக்கு மேலும் 4 அணிகள் தேவைப்படும் நிலையில், இலங்கை வெஸ்ட் இண்டீஸ் ஸ்காட்லாந்து அயர்லாந்து நெதர்லாந்து நமிபியா யுஏஇ ஜிம்பாப்வே ஆகிய எட்டு அணிகள் தகுதி சுற்றில் விளையாடின.

இதில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள், ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ள ஒன்றாவது குழுவில் நுழைந்தன. ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து அணிகள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இடம்பெற்ற இரண்டாவது குழுவுக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் பிரதான சுற்று ஆட்டங்கள் 75% மேல் முடிந்த நிலையில் ஒன்றாவது குழுவில் நியூசிலாந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் அரை இறுதிக்கு செல்லும் இரண்டு அணிகளுக்கான இடத்திற்கு போட்டியிடுகின்றன.

- Advertisement -

அதேபோல் இரண்டாவது குழுவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கான இரண்டு இடங்களுக்காக போட்டியிடுகின்றன.

இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு அடுத்து பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் தலா ஒரு போட்டி இருக்கிறது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி ஐந்து புள்ளிகள் உடன் இருக்கிறது.

இந்திய அணிக்கு அடுத்து ஜிம்பாப்வே அணி உடன் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி மீதம் இருக்கிறது. தற்பொழுது இந்திய அணி 6 புள்ளிகள் உடன் இருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு நாளை தென்னாபிரிக்க அணியுடனும் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் அணியுடனும் இரண்டு போட்டிகள் இருக்கிறது. தற்பொழுது பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் உடன் இருக்கிறது.

இந்திய அணி தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணி உடன் தோற்று, பாகிஸ்தான் அணி தனது இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணி 7 புள்ளிகள் உடனும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் தலா ஆறு புள்ளிகளுடனும் இருக்கும். இதில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி அதிக ரன் ரேட்டில் இருந்தால் பாகிஸ்தான் அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் அரை இறுதிக்கு முன்னேறும்.

அதே சமயத்தில் நாளை தென்னாபிரிக்கா அணியுடனோ, ஞாயிறு பங்களாதேஷ் அணியுடனோ பாகிஸ்தான் அணி தோற்றாலோ, இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றாலோ, இந்திய அணி சுலபமாக அரையிறுதிக்குள் நுழைந்து விடும்.

அதே சமயத்தில் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி, இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இருக்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணிவுடனும் நெதர்லாந்து அணிவுடனும் தோல்வியைத் தழுவினால், இந்தியா பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது!