உலகக் கோப்பை டி20 தொடரில் இவருக்கு இடம் இல்லையா – கடுங்கோபத்தில் கர்ஜிக்கும் சேவாக்

0
1182
Virender Sehwag

உலகக்கோப்பை டி20 தொடர் வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி துவக்கப்பட்டு நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் சில நாட்களுக்கு முன்னர் தொடரில் பங்கேற்கப் போகும் தங்களது அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்க பிசிசிஐ தரப்பில் 18 வீரர்களைக் கொண்ட இந்திய அணி பட்டியலும் அதிகாரபூர்வமாக வெளியானது. அந்த வீரர்களின் பெயர் பட்டியலில் சீனியர் ஸ்பின் பந்து வீச்சாளர் சஹால் பெயர் இடம்பெறவில்லை. இது பல்வேறு இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அவரது பெயர் ஏன் இடம்பெறவில்லை எனக்கு குழப்பமாக உள்ளது

இந்நிலையில் இது சம்பந்தமாக சமீபத்தில் பேசியுள்ள முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் விரேந்திர ஷேவாக், சஹால் பெயர் அணியில் இடம்பெறாதது தனக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 49 டி20 போட்டிகளில் விளையாடி 63 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். மறுபக்கம் ஐபிஎல் தொடரில் 100 கோடிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது.

அவரது திறமை மற்றும் அனுபவம் மூலமாக நடக்க இருக்கின்ற இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் எந்த அணியிலும் களம் இறங்கி விளையாட அவருக்கு தகுதி உள்ளது. கடந்த சில போட்டிகளில் அவரது ஃபெர்பார்மன்ஸ் சற்று சுமாராக இருந்திருந்தாலும், அவரது பெயர் நிச்சயமாக இடம் பெற்று இருந்திருக்க வேண்டும் என்று விரேந்திர சேவாக் தன்னுடைய கருத்தினை தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விளையாட உள்ள அஸ்வின்

2017 ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்கு லிமிடெட் ஓவர் பார்மெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி இருந்தார். அதன் பின்னர் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு, நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக 46 டி20 போட்டிகளில் விளையாடி ஐம்பத்தி இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் ஐபிஎல் தொடரிலும் 150க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி மிகப்பெரிய அனுபவத்தை தனது பெயருக்குப் பின்னால் அவர் வைத்துள்ளார்.

அவருடன் இளம் வீரர்கள் அக்ஷர் பட்டேல், ராகுல் சஹர் மற்றும் வருன் சக்ரவர்த்தி ஆகியோரும் ஸ்பின் பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர். பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தேர்வாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2021 ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் :

விராட் கோலி (C), ரோஹித் சர்மா (VC), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(WK), இஷான் கிஷன்(WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் பட்டேல், வருன் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி.

ஸ்டாண்ட் – பை வீரர்கள் : ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர்.