ஐபிஎல்

சஹலை குடி போதையில் மாடியிலிருந்து தொங்க விட்ட வீரர் யாரென்று கூற வேண்டும் – சேவாக் வலியுறுத்தல்

2020 ஐ.பி.எல் சீசன் ஆட்டங்களைத் தாண்டி திடீரென்று வெளியேவும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஐ.பி.எல் துவங்குவதற்கு ஒருநாள் முன்னதாக, ஐ.பி.எல் தொடரின் வெற்றிக்கரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார். அப்பொழுது சமூக வலைத்தளங்கள் முழுக்க கிரிக்கெட் இரசிகர்களிடேயே அதுதான் பெரிய விவாதப் பொருளாக இருந்தது.

- Advertisement -

இப்பொழுது அதற்கு ஈடான ஆனால் அதைவிட தீவீரமான ஒரு விசயம் இந்திய அணியின் பிரபல வீரரிடமிருந்து கிளம்பியிருக்கிறது. பி.சி.சி.ஐ-யின் பெரிய தலைகள் தலையிடுமளவுக்குப் பிரச்சினை பெரிதாக ஆரம்பித்திருக்கிறது.

விசயம் என்னவென்றால், 2013-ஆம் ஆண்டு மும்பை அணியின் இடம் பெற்றிருந்த, தற்போது இந்திய அணியின் பிரபல வீரரான யுஸ்வேந்திர சஹலை, அப்போது மும்பை அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர் ஒருவர் குடிபோதையில், ஹோட்டலின் 15-வது மாடியிலிருந்து தலைகீழாய் வெளியே தொங்கவிட்டார் என்றும், அப்பொழுது தான் மயங்கிவிட்டதாகவும், பொதுமக்கள் தலையிட்டே இந்தப் பிரச்சினையை முடித்து வைத்ததாகவும், அந்த வீரர் யாரென்று சொல்ல முடியாதென்றும் சஹல் தெரிவித்திருந்தார்.

இதுக்குறித்து தற்போது டிவீட் செய்திருக்கும் சேவாக் அதில் “இது உண்மையாக இருந்தால், அந்த வீரர் குடிபோதையில் செய்ததால், அவரது பெயரை வெளியிடுவது முக்கியம். இதை வேடிக்கையாகக் கருத முடியாது. இதன் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த விசயத்தில் என்ன நடந்தது? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை அறிவது முக்கியம்” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

இப்போது சமூக வலைத்தளங்களில் இது பரவ ஆரம்பித்து, அந்த வீரர் யாராய் இருக்குமென்று பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதில் பெரும்பாலோனோர், அந்த வீரர் பொலார்ட்தான் என்றும் கூறி வருகின்றனர். இப்போது சேவாக் இதில் கூறியுள்ள கருத்தால் மேலும் இந்த விசயம் சிக்கலாக ஆரம்பித்துள்ளது!

Published by