தற்போது ஐசிஐசிஐ ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஏ பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. அதே சமயத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த மற்றொரு பெரிய அணியான பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கிறது. இது குறித்து வீரேந்திர சேவாக் ஐசிசி இரு அணிகளும் ஒரே குழுவில் இடம் பெறுவதைப் பற்றி இனி யோசிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்து இந்திய அணியை 119 ரன்களில் சுருட்டினாலும் இலக்கை துரத்த முடியாமல் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இது பற்றி பேசிய சேவாக் மழையின் காரணமாக பாகிஸ்தான் அணி வெளியேறவில்லை என்றும், அவர்கள் மோசமாக விளையாடிய காரணத்தினால் வெளியேறி இருக்கிறார்கள் என்றும், எனவே மழையின் மீது பழியைப் போடக்கூடாது என்று பேசி இருக்கிறார்.
இத்தோடு ஐசிசி தொடர்களில் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இருந்து வருவதாகவும், எனவே பாகிஸ்தான் தொடர்ந்து தோல்வியடைகின்ற காரணத்தினால், ஐசிசி இது குறித்து மாற்றி சிந்திக்க வேண்டும் எனவும் பேசி இருக்கிறார்.
இது குறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “பாகிஸ்தான் அணி வெளியேறியதற்கு மழையை எப்படி குறை சொல்ல முடியும்? ஒருவேளை பாகிஸ்தான அணி தகுதி பெற்று இருந்தாலும் கூட அவர்கள் சூப்பர் 8 சுற்றில் தோல்வி அடைந்து விடுவார்கள். அந்தச் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரணிகள் எளிதானதாக இருக்க மாட்டார்கள். இந்தியாவுக்கு 120 ரண்களை விக்கெட் கைவசம் இருந்தும் துரத்த முடியாமல் 113 மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது. இப்படி இருக்கும் பொழுது மழையை எப்படி அவர்கள் குறை சொல்ல முடியும்.
இதையும் படிங்க:
2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வேறு வேறு குழுவில் இருந்தன. அந்த ஆண்டு இரு அணிகளுமே அடுத்த சுற்றை எட்ட முடியாமல் வெளியேறி வந்தன. ஐசிசி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் வைப்பதைப்பற்றி பரிசீலனை செய்யும். ஏனென்றால் பாகிஸ்தானில் இந்தியாவிடம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது” என்று கூறி இருக்கிறார்.