வர இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் கலக்கப்போவது இந்த நான்கு வீரர்கள் தான் – வீரேந்திர சேவாக் கருத்து

0
140
Virender Sehwag IPL

ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நாளை முதல் தொடங்க உள்ளது. கொரோனா காரணமாக தள்ளிப்போன இந்த தொடர் தற்போது மீண்டும் துவங்க இருக்கிறது. இந்திய மைதானங்களில் இல்லாமல் இந்த முறை அமீரக மைதானங்களில் தொடர் நடக்க இருக்கிறது. ஏற்கனவே சில ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது அதன் தொடர்ச்சி நாளை முதல் தொடங்க உள்ளது. மேலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் ஒரு சிலருக்கு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இணையும் வாய்ப்பு கிடைத்தாலும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் இந்த தொடரை எதிர்நோக்கி பல வீரர்கள் காத்திருக்கின்றனர்.

இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் விரேந்திர சேவாக், இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகின்ற நான்கு வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது இஷன் கிஷன், தேவதூத் படிக்கல், கே எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சங் ஆகியோரின் ஆட்டத்தை பார்க்க தான் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார். இந்த நான்கு வேளை ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் படிக்கல்தான் என்றும் அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பை தொடருக்கு தேர்வாக கூட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியுள்ளார் சேவாக்.

மேலும் இந்த தொடரை வெல்ல எந்த அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று குறித்த கேள்விக்கு தொடர் அமீரக மைதானங்களில் நடக்க இருப்பதால் இந்த முறையும் டெல்லி மற்றும் மும்பை அணிக்கு தான் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். மும்பை அணிக்கு சற்று அதிகமாக கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் விராட்கோலி ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக சாதனைகள் பல புரிந்து விட்டாலும் இன்னமும் ஐபிஎல் தொடரில் அவர் ஒரு கோப்பையை வென்ற ஆக வேண்டும் என்ற ஆசை பல ரசிகர்களுக்கு உள்ளது. பல கோப்பைகளில் இல்லாவிட்டாலும் எத்தனை ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்காக ஒரு கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தொடரில் அந்த மாற்றத்தை பெங்களூரு அணி எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

நாளை முதல் தொடர்ந்து உள்ள ஐபிஎல் தொடரில் சேவாக் கூறிய நான்கு வீரர்கள் எவ்வாறு விளையாட போகிறார்கள் என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.