நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் 14.2 கோடி தொகைக்கு பிரசாந்த் வீர் என்ற உள்நாட்டு வீரரை வாங்கியது. அவர் தற்போது தோனி தன்னிடம் என்ன பேசினார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.
தற்போது இவரை ரவீந்திர ஜடேஜா இடத்திற்காக குறி வைத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியிருக்கிறது. ஆனால் இவருக்கு உடனடியாக விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.
தற்போது 20 வயதாகும் இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் டி20 லீக்கில் பேட்டிங் வரிசையில் கீழே வந்து அதிரடியாக விளையாடக் கூடியவராக இருந்தார். மேலும் ஜடேஜா போல இடது கையில் சுழல் பந்து வீச்சையும் செய்யக்கூடியவர். எனவே எதிர்காலத்திற்காக ஜடேஜா இடத்தில் இவர் வாங்கப்பட்டு இருக்கிறார்.
அதே சமயத்தில் இவர் ரோலில் விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர் அகேல் உசேன் இருக்கிறார். எனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் யாருக்கு வாய்ப்பு தரும்? என்பது குழப்பமாக இருந்து வருகிறது.
சிஎஸ்கே அணி நிர்வாகம் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரையும் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் உள்நாட்டு வீரர் ஒருவருக்கு ஐபிஎல் ஏலத்தில் கொடுக்கப்பட்ட மிக அதிகபட்ச தொகையாக இது அமைந்திருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் அனைத்து ஐபிஎல் ரசிகர்கள் மத்தியிலும் அறியப்பட்டவர்களாக மாறி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எந்த எமோஷனும் காட்ட மாட்டேன்.. களத்துல சந்திக்கிறப்ப வேற மாதிரி இருப்பேன் – சஞ்சு சாம்சன் பேட்டி
இதுகுறித்து பிரசாந்த் வீர் பேசும் பொழுது ” தோனி சாரிடம் அதிகம் பேசவில்லை. அவர் என்னிடம் பேசும் பொழுது கிரிக்கெட் குறித்து இதுவரையில் பேசவில்லை. எனக்கு தற்போது கிடைத்திருக்கும் பணத்தை சேமித்து வைக்க சொன்னார். அதை தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் இவ்வளவு தான் பேசியிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.