பென் ஸ்டோக்ஸின் ஓய்வு ஐ.பி.எல் தொடருக்குத் தான் நல்லது – ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து

0
143
Scott Styris and Ben Stokes

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் கதாநாயகன் பென் ஸ்டோக்ஸ், நேற்று முன்தினம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது, சில முக்கியமான விவாதங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்களிடம் உருவாக்கி இருக்கிறது. நேற்று டர்ஹமில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு பென்-ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றுவிட்டார்!

தற்போது கிரிக்கெட் போட்டி அட்டவணைகள் பெரிய கிரிக்கெட் நாடுகளுக்கு மிகக் கடினமாக இருக்கிறது. போட்டிகளும் அதிகமாய் இருக்கிறது. இதனால் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் எளிதில் காயமடைகிறார்கள், மேலும் அதிகப்படியான பணிச்சுமையால் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். வீரர்களின் இப்படியான மனபாதிப்புகள் குறித்து சமீபக் காலங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதே பென் ஸ்டோக்ஸ், இவருக்கு முன் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் இந்தப் பிரச்சினைகளுக்காக தற்காலிக ஓய்வை கேட்டு வாங்கியதிலிருந்து, வீரர்களின் பணிச்சுமை, அதனால் உருவாகும் மனபாதிப்புகள் குறித்த பார்வை கிரிக்கெட் வட்டாரங்களில் விரிவடைந்து இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது பென் ஸ்டோக்ஸ் அதிகப்படியான போட்டிகளில் விளையாடுலாதால் தனது உடல் மூன்று வடீவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றது, பணிச்சுமையால் உருவாகும் மனபாதிப்புகள் பற்றியான விவாதத்தைத் தாண்டி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அழிகிறதா? என்ற வீவாதத்தையும் கிளப்பி இருக்கிறது!

டி20 கிரிக்கெட் போட்டிகளில் வருகைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான மதிப்பு குறைந்தே வருகிறது. மேலும் பீல்டிங் விதிகளை மாற்றியது, இரு முனைகளிலும் இரு பந்து, தட்டையான ஆடுகளங்கள் அமைப்பது இதெல்லாம் ஒருநாள் போட்டிகளின் தரத்தையும் குறைத்து விட்டது. இத்தோடு பணிச்சுமையால் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும் ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் வீரர்களால் 100% உடற்தகுதியோடு, மனரீதியாக விரும்பி, அர்ப்பணிப்போடு விளையாட முடிவதில்லை.

தற்போது பென் ஸ்டோக்சின் ஓய்வு குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் பேசியிருக்கிறார். அவர் கூறும்பொழுது “இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அழிவு பாதையில் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறுவேன். கடந்த 2019 உலகக்கோப்பை தொடரே இதற்கு நல்ல உதாரணம். நாம் இருப்பதில் நேர்மறையான நல்ல விசயங்களை மட்டும் பார்ப்போம். இதில் இந்திய டி20 லீக் ஐ.பி.எல் ஒரு பயனாளியாக இருக்கும். கடந்த உலகக்கோப்பையின் கதாநாயகன் இந்த உலகக்கோப்பையில் இல்லையென்பது பெரிய அடிதான் அதில் சந்தேகமில்லை. ஆனால் ஆடுகின்ற அன்றைய போட்டியில் சிறந்த ஏதாவது கொடுக்க வேண்டும். வீரர்களுக்கு இது மகிழ்ச்சி தரும் காரணி. தான் எதில் சிறந்தவர், தனக்கு எது சரி என்று பென் ஸ்டோக்ஸ் எல்லாவற்றையும் நிச்சயம் எடை போட்டிருப்பார்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -