ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட்டின் ஒரு பகுதி தகுதி சுற்று தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஓமன் மற்றும் ஸ்காட்லாண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சாளர் சார்லி கேசல் அறிமுக போட்டியிலேயே மிகச் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தி உள்ளார்.
2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதி தகுதி சுற்று தொடரான ஐசிசி உலகக் கோப்பை லீக் டூ 2023-2027 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16 வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஸ்காட்லாந்து அணி ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இந்த நிலையில் போட்டியின் 12 வது ஓவரில் தனது அறிமுகப் போட்டியில் முதல் ஓவரை வீச வந்த சார்லி கேசில் தனது முதல் பந்திலேயே ஓமன் அணி வீரர் ஜீசன் மக்ஷூத்தை வெளியேற்றினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய அயான் காணையும் தனது இரண்டாவது பந்திலேயே ஆட்டம் இழக்க செய்து வெளியேற்றினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டி தொடரில் முதல் இரு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையையும் படைத்தார்.
அதற்குப் பிறகு தனது நான்காவது பந்தில் காலித்தின் விக்கட்டையும் வீழ்த்தி ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவர்தான் ஓமன் அணிக்கு எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பின்னர் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற ஓமன் அணி 21.4 ஓவர்களில் 91 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய சார்லி கேசல் 5.4 ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தனது அறிமுக போட்டியில் எழு விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேக பந்துவீச்சாளர் என்ற வரலாற்றை படைத்தார். இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா வங்கதேச அணிக்கு எதிராக 16 ரன்களை விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியது அதிகபட்ச சாதனையாக இருந்தது.
இதையும் படிங்க:நான் இப்ப ரெஸ்ட்ல இருக்க காரணமே இந்தியாதான்.. இழந்த அதை பிடிச்சே ஆகணும் – பாட் கம்மின்ஸ் பேட்டி
இப்போது அந்த சாதனையை முறியடித்த முதல் ஸ்காட்லாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். இதற்கு அடுத்ததாக 2022ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பிடல் எட்வர்ஸ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 22 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதற்கு அடுத்து 2019ஆம் ஆண்டு நமீபியாவைச் சேர்ந்த ஜான் ஃப்ரைலின்க் ஓமன் அணிக்கு எதிராக 13 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.