உலகக்கோப்பை குவாலிபயரில் செம்ம ட்விஸ்ட்… டாப்பில் இருந்த ஜிம்பாப்வே உலகக்கோப்பையில் இருந்தே வெளியேற்றம்! – ஆப்படித்த ஸ்காட்லாந்து அணி!

0
3081

உலகக்கோப்பை குவாலிஃபயர் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்து அணியிடம் வீழ்ந்து உலக்கோப்பை கனவை பறிகொடுத்து வெளியேறியது ஜிம்பாப்வே அணி.

உலகக்கோப்பை சூப்பர் 6 சுற்றில் இன்று நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜிம்பாப்வே அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தது.

- Advertisement -

போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் இறங்கியது. துவக்க வீரர்கள் மெக்பிரைட் 28 ரன்கள், மேத்தீயு கிராஸ் 38 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து வெளியேறினர். அடுத்து வந்த பிரண்டன் 34 ரன்கள், முன்செ 31 ரன்கள் அடிக்க ஸ்காட்லாந்து அணி வலுவான துவக்கம் பெற்றது.

கடைசியில் வந்த மைக்கேல் லீஸ்க் 48 ரன்களும் மார்க் வாட் 21 ரன்கள் அடித்து தங்களது பங்களிப்பை கொடுத்ததால், ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்தது.

சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள், சத்தாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி பந்துவீச்சில் நல்ல பங்களிப்பை கொடுத்தனர். நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நரவா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் 235 ரன்கள் இலக்கை துரத்தி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, துவக்க வீரரை முதல் ஓவரின் முதல் பந்திலையே இழந்தது. நட்சத்திர பேட்ஸ்மேன் ஏர்வின் வெறும் 2 ரன்களுக்கும், இன்னசென்ட் கையா 12 ரன்கள், சீன் வில்லியம்ஸ் 12 ரன்கள் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறி பேரதிர்ச்சியை கொடுத்தனர்.

4 விக்கெட்டுகளை இழந்த பிறகு சிக்கந்தர் ராசா மற்றும் ரியான் பர்ல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டனர். இதில் சிக்கந்தர் ராசா 34 ரன்கள் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வெஸ்லி ரியான் பர்ல் உடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

வெஸ்லி 39 பந்துகளில் 40 ரன்கள் அடித்து தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தார். ரியான் பர்ல் கடைசி வரை போராடி வந்தார். 84 பந்துகளில் 83 ரன்கள் அடித்து போட்டியை ஃபினிஷ் செய்ய முடியாமல் வருடத்துடன் ரியான் பர்ல் வெளியேறினார்.

41.1 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே அடுத்து ஜிம்பாப்வே அணி ஆல் அவுட் ஆகியது. 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவியதால், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை குவாலிபயர் சுற்றுடன் ஜிம்பாப்வே அணி வெளியேறியது. உலககோப்பைக்கு தகுதிபெற முடியாமல் போயுள்ளது.

ஏற்கனவே இலங்கை அணி உலககோப்பைக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றது. தங்களது கடைசி சூப்பர் சிக்ஸ் போட்டியில் வெற்றி பெறும் அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் நிலையிலும் இருக்கிறது. இரு அணிகளும் வென்றால், ரன்ரேட் அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி தகுதிபெறும் வாய்ப்பும் உள்ளது.