2023-25 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணை

0
325
World Test Championship

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைச் சுவராசியப்படுத்தும் பொருட்டு, டெஸ்ட் போட்டிகளில் முடிவை எட்டும் படி ஆடுகளம் அமைக்க டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளை ஐ.சி.சி கேட்டுக்கொண்டது. மேலும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளையும் நடத்தி வருகிறது. இதில்லாமல் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவது போல, டெஸ்ட் போட்டிகளுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐ.சி.சி நடத்துகிறது!

இரண்டு வருடங்களில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் பெறும் வெற்றியின் அடிப்படையில் வழங்கப்படும் புள்ளிகளின் சராசரியை வைத்து, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளைக் கொண்டு, அதில் வெல்லும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் வழங்கப்படுகிறது. இதன் முதல் தொடர் 2019-2021 காலக்கட்டத்தில் நடந்தது. இதன் இறுதிபோட்டிக்கு இந்தியா நியூசிலாந்து அணிகள் தகுதிபெற, இறுதுபோட்டியில் நியூசிலாந்து அணி வென்று சாம்பியன் ஆனது.

- Advertisement -

இதற்கடுத்து 2021-2023 ஆம் ஆண்டு இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான டெஸ்ட் போட்டிகள் நடந்தது வருகிறது. தற்பொழுது 2023-2025 ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக, எந்தெந்த அணிகள் எந்தெந்த அணிகளோடு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளையாடுகின்றன என்ற பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது!

ஆஸ்திரேலியா :
உள்நாடு : இந்தியா, வெஸ்ட் இன்டீஸ், பாகிஸ்தான்.
வெளிநாடு : நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை.

பங்களாதேஷ் :
உள்நாடு : நியூசிலாந்து, செளத்ஆப்பிரிக்கா, இலங்கை.
வெளிநாடு : இந்தியா, வெஸ்ட்இன்டீஸ், பாகிஸ்தான்.

- Advertisement -

இங்கிலாந்து :
உள்நாடு : ஆஸ்திரேலியா, வெஸ்ட்இன்டீஸ், இலங்கை.
வெளிநாடுு : நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான்.

இந்தியா :
உள்நாடு : நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ்.
வெளிநாடு :ஆஸ்திரேலியா, வெஸ்ட்இன்டீஸ், செளத்ஆப்பிரிக்கா.

நியூசிலாந்து :
உள்நாடு : ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, செளத்ஆப்பிரிக்கா.
வெளிநாடு : இந்தியா, பங்களாதேஷ், இலங்கை.

பாகிஸ்தான் :
உள்நாடு : இங்கிலாந்து, வெஸ்ட்இன்டீஸ், பங்களாதேஷ்.
வெளிநாடு : ஆஸ்திரேலியா, செளத்ஆப்பிரிக்கா, இலங்கை.

செளத்ஆப்பிரிக்கா :
உள்நாடு : இந்தியா, பாகிஸ்தான், இலங்கை.
வெளிநாடு : நியூசிலாந்து, வெஸ்ட்இன்டீஸ், பங்களாதேஷ்.

இலங்கை :
உள்நாடு : நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்.
வெளிநாடு : இங்கிலாந்து, செளத்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ்.

வெஸ்ட்இன்டீஸ் :
உள்நாடு : இந்தியா, செளத்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ்.
வெளிநாடு : ஆஸ்திரேலியா, செளத்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்.