“இதை நேரடியாக என்னிடமே கூறி இருக்கலாம்” – ஐபிஎல் முன்னாள் சாம்பியன் வருத்தம்!

0
4900
IPL

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்குமே கிரிக்கெட்டின் கோலாகலாகத் திருவிழாவாக இருப்பது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தான் . 2023 இல் தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டி தொடர்களுக்காக அனைத்து அணிகளும் தங்களது திட்டங்களையும் வியூகங்களையும் தொடங்கிவிட்டன .

2023 ஐ பி எல் ஐ முன்னிட்டு அதற்கான மினி ஏலம் டிசம்பர் 23 இல் கொச்சியில் வைத்து நடைபெற இருக்கிறது . அனைத்து அணிகளும் தாங்கள் விடுவித்த வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு விட்டன. இதில் லக்னோ அணிக்காக ஆடிய இந்திய வீரர் தான் விடுவிக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவர்தான் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதலாவதாக சதம் அடித்த இந்திய வீரர் . . அந்த வீரர் மனிஷ் பாண்டே. அவர் லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது பற்றி ஸ்போர்ட்ஸ்
கீடா இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் வருத்தம் தெரிவித்துள்ளார் . தன்னுடைய நீக்கம் பற்றி குறிப்பிட்டுள்ள அவர் “என்னை அவர்கள் விடுவித்து விடுவார்கள் என்று தெரியும் இருந்தாலும் அதனை என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம், நான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதை செய்திகளின் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன்”

கடந்த சீசனில் சரியாக சோபிக்காத நிலையில் இந்த சீசனில் நன்றாக ஆட வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன் , அவர்களின் முடிவு எனக்கு ஒரு சிறிய வருத்தத்தை தந்தாலும் தொழில்முறை ஆட்டக்காரராக நான் இதை கடந்து போக வேண்டும்” என்று தெரிவித்தார்.

நடக்க இருக்கும் ஐபிஎல் இல் அவருடைய வாய்ப்புகள் பற்றி கேட்டதற்கு .”செய்யது அலி முஸ்டாக் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடி இருக்கிறேன் , தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஜய் ஹசாரே தொடரிலும் சிறப்பாக விளையாட வேண்டும் . ஒரு நல்ல அன்னிக்கு செல்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது”, என்று கூறினார்.

- Advertisement -

கடந்த ஐபிஎல் சீசனில் ஆறு போட்டிகள் லக்னோ அணிக்காக விளையாடிய மணிஷ் பாண்டே 88 ரன்களை மட்டுமே பெற்று இருந்தார். மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரண்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது சிறந்த ஐபிஎல் சீசன் கொல்கத்தா அணிக்காக ஆடும் போது போது இருந்தது .