தேர்வுக்குழுவினர் மீது பரபரப்பு புகார்.. சேத்தன் சர்மா இப்படிலாம் பண்ணுவாரா?

0
529

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் சர்பராஸ் கான் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. கடந்த 2019 20ஆம் ஆண்டு ரஞ்சி போட்டியில் 928 ரன்கள் அடித்த சர்பிராஸ் கான் கடந்த சீசனில் 982 ரன்கள் விளாசினார். டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை சர்பிராஸ் கான் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து மௌனத்தை கலைத்துள்ளார். கடந்த முறை ரஞ்சி இறுதிப் போட்டிகள் சதம் விளாசிய பிறகு தேர்வு குழுவினர் என்னை சந்தித்து வங்கதேச தொடருக்கு தயாராக இருக்கும்படி எனக்கு நம்பிக்கை அளித்தார்கள். ஆனால் வங்கதேச தொடரில் எனது பெயர் இடம்பெறவில்லை. அதன் பிறகு சேத்தன் சர்மாவும் என்னை சந்தித்து இந்திய அணியின் இடம் பிடிக்கும் வாய்ப்புக்கு அருகில் வந்து விட்டதாகவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ஏமாற்றம் இல்லாமல் இருக்கவும் என்று கூறினார்.

ஆனால் அதன் பிறகும் ஆஸ்திரேலியா தொடரில் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை.இதை பார்த்ததும் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஒரு நாள் முழுவதும் நான் சோகமாக தான் இருந்தேன். யாருக்கும் தெரியாமல் அழுத்தேன். என் இடத்தில் யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடரில் நிச்சயம் என்னுடைய பெயர் அணியில் இடம் பெறும் என நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

இப்போது நான் அனைத்தையும் மறந்து விட்டேன் என்று சர்பிராஸ் கான் கூறினார். தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா,இது போல் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்துவிட்டு பிறகு ஏமாற்றுகிறார் என்று பலமுறை விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது அவர் இரண்டாவது முறையாக தனது பதவியில் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.