கிடைத்த வாய்ப்பை மோசமாய் வீணடித்த சஞ்சு சாம்சன்- வீடியோ உள்ளே!

0
71
Samson

இந்திய அணி தனது உள்நாட்டில் இலங்கை அணியை எதிர்த்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாட முதலில் டி20 தொடரில் விளையாடி வருகிறது!

டி20 தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கையணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கில் மற்றும் சிவம் மாவி இருவரும் அறிமுகம் ஆனார்கள்!

இந்திய அணிக்கு முதல் ஓவரில் நல்ல துவக்கம் கிடைத்தாலும் அதற்குப்பின் சுழற் பந்துவீச்சாளர்கள் வர இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது. கில், சூரியகுமார் தலா 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த சஞ்சு சாம்சன் கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டார். டீப் மிட்விக்கட் திசையில் அவர் தந்த கேச்சை அசலங்கா தவறவிட, அடுத்து கொஞ்சம் கூட சுதாரிக்காமல் தனஞ்செய டி சில்வா பந்தை சுற்றி கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இதற்குப் பின்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா வந்து கொஞ்சம் அதிரடியில் ஈடுபட்டு 29 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து இஷான் கிஷான் 37 ரன்னில் ஆட்டம் இழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அணியை சரிவிலிருந்து காப்பாற்றினார்கள். இந்த ஜோடி 68 ரன்கள் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் 23 பந்தில் 41 ரன்களை தீபக் ஹூடாவும், 20 பந்தில் 31 ரன்களை அக்சர் பட்டேலும் எடுத்தார்கள்!