மாஸ் காட்டிய சஞ்சு சாம்சன் ; திக் திக் ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி!

0
2847
Ind vs Sa

உத்தரப்பிரதேச நகர லக்னோ நகர மைதானத்தில், இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இன்று மோதின!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டி மழையின் காரணமாக 40 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

ஆடுகளம் சற்று பேட்டிங் செய்ய கடினமாக இருந்த காரணத்தால் தென்ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர்கள் திணறினார்கள். குயின்டன் டி காக் தாக்குப்பிடித்து விளையாடி 48 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா மற்றும் மார்க்ரம் இருவரும் சீக்கிரத்தில் வெளியேறினார்கள்.

இதற்கடுத்து ஜோடி சேர்ந்த கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி இந்திய பந்து வீச்சை மிக சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடியது. இந்த இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக சதங்கள் அடிக்க ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 249 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களம் கண்ட இந்திய அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில், ஷிகர் தவன், ருதுராஜ் மற்றும் இஷான் கிஷான் ரன்னும் அடிக்காமல் பந்துகளையும் வீணடித்து விட்டார்கள்.

ஆனால் இதற்கடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. நெருக்கடியான நேரத்தில் வந்து 37 பந்துகளில் மிகச் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.

இதற்கு அடுத்து இந்திய அணியின் தோல்வி உறுதி என்று நினைத்த நிலையில், சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்த பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 31 பந்துகளில் 33 ரன்கள் குவிக்க இடம் கொஞ்சம் இந்தியா பக்கம் திரும்பியது. ஆனால் இவர் ஆட்டமிழந்த ஓவர் மற்றும் அடுத்த ஓவரில் இந்திய அணிக்கு ரன்கள் வராததால் தடுமாற்றம் உருவானது.

இதற்கடுத்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. சம்சி வீசிய இந்த ஓவரை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் பிரமாதமாக 20 ரன்கள் நொறுக்கி தள்ளினார். இந்த ரன்கள் வெற்றிக்கு போதவில்லைதான். ஆனாலும் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர் ஆகியோரது போராட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இறுதிவரை ஆட்டம் இழக்காத சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 86 ரன்கள் குவித்தார். இறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.