சஞ்சு சாம்சன் என் இடத்தில் விளையாட வேண்டுமென்று நினைக்கிறேன் – மனிஷ் பாண்டே வெளிப்படையான பேச்சு!

0
954
Samson

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் ரவி சாஸ்திரி பயிற்சியில் முதல் சுற்றில் தோற்று வெளியேறி வந்தது இந்திய கிரிக்கெட்டில் பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

இதற்கு அடுத்து விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், தனது பணிக்காலம் முடிந்து ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியதும், புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவையும், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டையும் கொண்டுவர வழி வகுத்தது!

- Advertisement -

இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்த பிரச்சனைகளை சரி செய்து, புதிய அணியை உருவாக்க, பல்வேறு புதிய முயற்சிகளை செய்தார்கள். இதில் மிக முக்கியமாக இளம் வீரர்களும் மூத்த வீரர்களும் அணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்.

ஆனாலும் கடைசி நேரத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரும், இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும், ஜஸ்ட்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயத்தால், நடந்து முடிந்த டி20 உலக கோப்பை அணியில் இருந்து விலக அது இந்திய அணியின் உலகக்கோப்பை தயாரிப்பில் பெரிய பிரச்சனையை உண்டாக்கியது.

மாற்று வீரர்களைக் கொண்டு வந்து ஒரு மாதிரி சமாளித்து ஒரு அணியை டி20 உலக கோப்பைக்கு எடுத்துச் சென்று அரையிறுதியில் படுதோல்வி அடைந்து இந்திய அணி திரும்பி வந்தது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது இந்திய அணிக்கு குறிப்பாக இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனையும் புதிய வீரர்களையும் தேடும் படலம் நடக்க ஆரம்பித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியில் முன்பு இடம்பெற்று விளையாடி வந்த கர்நாடகாவைச் சேர்ந்த மணிஷ் பாண்டே சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து இருக்கிறார். இவர் 29 ஒருநாள் போட்டிகளிலும் 39 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிஷ் பாண்டே கூறும் பொழுது
” தற்போது நான் அணியில் தேர்வு செய்யப்படாத குறித்து நிச்சயம் கொஞ்சம் வருத்தப்படுவேன் என்பதுதான் உண்மை. ஆனால் நான் இந்திய அணிக்காக விளையாடி உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடையவே செய்கிறேன். சஞ்சு சாம்சன் மிக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே அவர் இப்போது இந்திய அணியில் எனது இடத்தில் இடம்பெற வேண்டும் என்று நான் நினைத்தேன். இது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் உள்நாட்டில் விளையாடி நிறைய ரன்களை குவித்து இது அணிக்கு திரும்பி வர விரும்புகிறேன். ஆனால் அது சில நேரங்களில் துரதிஷ்டவசமாக நடக்கவில்லை. இது மேற்கொண்டு எப்படி போகிறது என்று பார்க்கலாம். மேலும் அணியில் வாய்ப்பு பெற்று விளையாட முடியாமல் வெளியில் இருப்பதைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். இந்த மாதிரி நேரங்களில் அதிக நம்பிக்கை உடன் இருக்க வேண்டும் ” என்று சஞ்சு சாம்சனுக்கு தனது அறிவுரையையும் கூறி இருக்கிறார்!