சஞ்சு சாம்சன் திலக் வர்மா ஷர்துல் தாகூர் அசத்தல்; பந்துவீச்சில் ராஜ் பவா மிரட்டல் ; நியூசிலாந்தை வொய்ட் வாஷ் செய்தது இந்தியா!

0
5172
India a

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் இந்திய ஏ அணிக்கு விளையாடியது. முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் 1-0 என இழந்தது.

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரரின் மூன்று போட்டிகளிலும் சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.

- Advertisement -

இன்று 3வது போட்டி நடந்தது, இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்திய அணியை முதலில் பேட் செய்யும் என அறிவித்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அபிமன்யு ஈஸ்வரன் 39 (35), ராகுல் திரிபாதி 18 (25) இருவரும் ஆட்டமிழந்தும் வெளியேற அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 54 (68) அரை சதம் அடித்தார். இவருடன் சேர்ந்து விளையாடிய இளம் வீரர்களுக்கு வர்மா 50 (64) அரை சதம் அடித்தார். இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாகூர் 51 (33) ரன்கள் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 281 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களம் கண்ட நியூஸிலாந்து அணி தரப்பில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. துவக்க வீரர்களில் டீன் கிளேவர் மட்டும் தாக்குப்பிடித்து 83 (89) ரன்கள் எடுத்தார். முடிவில் நியூசிலாந்து அணி 38.3 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் 19 வயதுக்கு உட்பட்ட அவர்களுக்கான உலகக்கோப்பையில் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய இளம் ஆல்ரவுண்டர் ராஜ் பவா 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.

நியூசிலாந்து ஏ அணியுடனான ஒருநாள் தொடரை கேப்டனாக இருந்து வொய்ட் வாஷ் செய்து கைப்பற்றியுள்ள சஞ்சு சாம்சனை அடுத்து சவுத்ஆப்பிரிக்கா அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் துணைக் கேப்டனாக நியமிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது!

- Advertisement -