வீடியோ: இரண்டு வேற லெவல் கேட்ச்; கீப்பிங்-ல் மரண மாஸ் காட்டிய சஞ்சு சாம்சன்!!

0
361

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக கீப்பிங் செய்த விதம் பலரின் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியில் செய்த அதே தவறை இரண்டாவது போட்டியிலும் ஜிம்பாப்வே அணி செய்ததால் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கநேரிட்டது. இப்போட்டியில் சீன் வில்லியம்சன் 42 ரன்களும், ரியான் பார்ல் 39 ரன்களும் அடித்திருந்தனர். இந்த இரண்டு வீரர்கள் நன்றாக விளையாடியபோதும், இவர்களுக்கு பக்கபலமாக வேறு எவரும் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்சன் மற்றும் சிக்கந்தர் ராசா இருவரும் சற்று ஆறுதல் தரும் விதமாக 41 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து வந்ததால் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த சஞ்சு சாம்சன் அபாரமாக செயல்பட்டு மூன்று கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் செய்தார். குறிப்பாக அதில் ஜிம்பாப்வே வீரர் கைடனோவின் கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் மிகுந்த பாராட்டுதலை பெற்றிருக்கிறது. முகமது சிராஜ் பந்தை துவக்க வீரர் கைடானோ அடிக்க முயற்சித்தார். பந்து கீப்பர் வசம் சென்றது. சஞ்சு சாம்சன் அதை லாவகமாக பிடித்து ஆட்டம் இழக்கச் செய்தார். முதல் போட்டியிலும் இதுபோன்ற ஒரு கேட்சை சஞ்சு சாம்சன் பிடித்தது பாராட்டுதலை பெற்றது. மீண்டும் ஒரு முறை கீப்பிங் மூலம் தன்னை நிரூபித்திருக்கிறார் சாம்சன்.

இரண்டாவது போட்டியில் புதிதாக உள்ளே எடுத்து வரப்பட்ட தாக்கூர் அசத்தலாக பந்து வீசினார். 38 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்த அவர், மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா உட்பட மற்ற பந்துவீச்சாளர்கள் தல ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

162 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தவான் 33 ரன்கள் அடித்து நல்ல துவக்கும் கொடுத்து வெளியேறினார். கேப்டன் கேஎல் ராகுல் இந்த முறை துவக்க வீரராக களமிறங்கி வெறும் 1 ரன் மட்டுமே அடித்து வெளியேறி அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த சுப்மன் கில் நிதானத்துடன் விளையாடி வருகிறார். ஆனால் மற்றொரு இளைஞர் இசான் கிஷன் வெறும் 6 ரன்கள் மட்டும் அடித்திருந்தபோது பந்தை தவறாக கணித்து அவுட் ஆனார். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 91 ரன்கள் எடுத்து விளையாடுகிறது.

- Advertisement -