சஞ்சு சாம்சன் இதை மட்டும் செய்யவே கூடாது- சங்கக்கரா ஆலோசனையும் ஆதரவும்!

0
748
Sanju

இந்திய கிரிக்கெட் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் தேவைப்படும் நிலையில் இருக்கிறது. அணியில் மூத்த மற்றும் முன் வரிசை வீரர்களான ரோகித் சர்மா விராட் கோலி, சிகர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் இருந்து வெளியேற இருக்கிறார்கள்!

மேலும் இந்திய கிரிக்கெட்டை மாறிவரும் உலக கிரிக்கெட்டுக்கு தகுந்தவாறு குறிப்பாக வெள்ளைப் பந்து போட்டிகளில் அதிரடியாக தைரியமாக விளையாடும் ஒரு அணியாக மாற்ற வேண்டிய தேவை வெகுவாக அதிகரித்து இருக்கிறது!

- Advertisement -

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் இந்தியா வரும் இலங்கை அணி உடன் நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு கேப்டன் மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா டி20 இந்தியா அணிக்கு கேப்டன் ஆகவும் ஒரு நாள் போட்டி அணிக்கு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பேட்ஸ்மேன்கள் ராகுல் திரிபாதி, சந்து சாம்சன், இசான் கிசான் ஆகியோரும் பந்துவீச்சில் உம்ரான் மாலிக்கும் வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள்.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் என்றால் அது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்தான். அவரது பேட்டிங் திறமை மேல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது ஆனால் அவருக்கு வாய்ப்பு அமையவில்லை.

தற்பொழுது இலங்கை அணிவுடனான டி20 தொடருக்கு அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஐபிஎல் தொடரில் அவர் கேப்டனாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள லெஜன்ட் சங்கக்கரா சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது ” அவர் இந்த வாய்ப்பில் செய்யக்கூடாத ஒன்று என்னவென்றால், இதுதான் தன்னை நிரூபிக்க கடைசி வாய்ப்பு என்று அவர் நினைத்து விளையாடவே கூடாது. ஒரு பேட்ஸ்மேனுக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் அவர் பெற்றிருக்கிறார். அவர் ஒரு அற்புதமான திறமையான இளைஞர். அவர் பேட்டிங்கில் எந்த இடத்தில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்பதை பொறுத்து பேட்டிங் செய்ய வேண்டியதாக இருக்கும். மேலே அல்லது லோயர் ஆர்டரில் இறங்க அதிக வாய்ப்புகள் உண்டு. அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் பவர் டச் மென்ட்டாலிட்டி மிகச் சிறப்பாக உள்ள வீரர்!” என்று தெரிவித்துள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நீங்கள் உங்கள் ஆட்டத்தை ரசித்து விளையாடும் வரை நீங்கள் நீண்ட காலம் விளையாட முடியும் நன்றாகவும் விளையாட முடியும். நீண்ட காலம் விளையாட இந்த மனநிலை உங்களுக்கு வேண்டும். கிரிக்கெட்டை ரசித்து அனுபவித்து விளையாடுங்கள். தற்பொழுது சஞ்சு சம்சனுக்கு மற்றும் ரசிகர்களுக்கு திறமையை நிரூபிக்கவும் நல்ல கிரிக்கெட்டை பார்க்கவும் அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார்!