இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் முதல் முறையாக களம் இறங்க இருக்கிறார். மேலும் அவர் இதுவரையில் விளையாடி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக விளையாட இருக்கிறார்.
சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்ற காரணத்தினால், மேலும் சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கிய ஆட்டங்களில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடியிருப்பதால், இந்த முறை ஐபிஎல் தொடரில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும் பொழுது “நான் சிஎஸ்கே அணியில் ஒரு அங்கமாக இருக்கப் போவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் தோனி பாய்வுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறேன். மேலும் இந்திய அணியில் இருந்த போது ஒன்றாக இருந்திருக்கிறேன். அவருடன் பேசியது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது நல்ல உணர்வாக அமைந்தது. இப்போது அது வேறுபட்டதாக இருக்கும்”
“ஏனென்றால் நான் சிஎஸ்கே அணியில் இரண்டு மாதங்கள் அவருடன் சேர்ந்து இருக்கப் போகிறேன். இதற்கு முன் இவ்வளவு காலம் சேர்ந்து இருந்ததில்லை. எனவே இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அவரது அருகில் இருந்து முக்கியமான விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்”
“நான் முதல் முறையாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடப் போகிறேன். இதனால் என் உணர்ச்சிகளை தான் மிகவும் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வேன். என் காலம் அந்த அணியில் முடிந்து விட்டது என்று உணர்ந்ததால்தான் வெளியேறி வந்தேன். இப்போது அவர்களுக்கு எதிராக விளையாடினாலும் நான் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவேன்”
இதையும் படிங்க : வைபவ் சூரியவன்சியை போல அதிரடியா இல்லாமல் இருக்கலாம்.. ஆனா அவரோட தரம் வேறு மாதிரி – இந்திய முன்னாள் வீரர்
“டி20 உலகக் கோப்பை தொடரின் போது சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த வாய்ப்பு மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவர்களில் ஒருவராக என்னை பார்க்கிறார்கள். நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தனர். நான் ஐபிஎல் தொடரில் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. என் முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.