கேரள அணியில் நீக்கப்பட்ட சஞ்சு சாம்சன்.. ஆச்சரிய விளக்கம் கொடுத்த மூத்த அதிகாரி.. விஜய் ஹசாரே டிராபி 2025

0
926

இந்தியாவில் நடைபெற உள்ள மிகவும் பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி வருகிற 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் கேரள அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் அதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் ஹசாரே டிராபி

விஜய் ஹசாரே டிராபி வருகிற 21ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில் இதன் முதல் சுற்று ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதற்குப் பிறகு நாக் அவுட் சுற்றுப்போட்டிகள் நடைபெற 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். இதன் குரூப் இ பிரிவில் கேரளா அணியோடு பெங்கால், டெல்லி, திரிபுரா, மத்திய பிரதேஷ், பரோடா மற்றும் பீகார் அணிகள் விளையாட இருக்கின்றன. இதன் லீக் சுற்றுப்போட்டிகள் விரைவாக நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய டி20 அணியில் தற்போது தொடக்க ஆட்டக்காரராக விளையாடி அபாரமாக தனது செயல் திறனை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவரது சொந்த மாநில அணியான கேரள அணியில் அவரது பெயர் இடம் பெறாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் நிலையில் உள்நாட்டுத் தொடரில் அவரது பெயர் இல்லாமல் இருப்பது விமர்சனத்தை உண்டாக்கியிருக்கிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் இடம் பெறாததற்கான காரணம்

இந்த நிலையில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் சஞ்சு சாம்சன் அணியில் இல்லாததற்கான காரணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. அதற்கு மாறாக கேரள அணி அவரது பெயரை விலக்கவில்லை எனவும் சஞ்சு சாம்சன் தற்போதைக்கு போட்டியிலிருந்து விலகி இருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார். இதனால் சாம்சன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரில் விளையாடாமல் இருக்கலாம் என்ற கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க:ரோஹித் அதை மட்டும் நினைச்சா போதும்.. அப்புறம் பாருங்க எப்படி ஆடுவார்னு – தினேஷ் கார்த்திக் கருத்து

சஞ்சு சாம்சன் கடைசியாக சையது முஸ்தாக் அலி டிராபி டி20 தொடரில் கேரளா அணிக்காக விளையாடி இருக்கிறார். கேரள அணிக்காக கேப்டனாக இருந்த நிலையில் சர்வீசஸ் அணிக்கு எதிராக 75 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் கேரள அணி அந்தத் தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்த நிலையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு பதிலாக கேரளா அணிக்கு சல்மான் நிசார் கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -