ரசிகர்கள் போட்ட போடு..! பதறி போய் வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ

0
445

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்து நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக வெயில் எட்டிப் பார்த்துள்ளது. டாசை இழத்த ஷிகர் தவான் தாமும் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பேன் என்று கூறினார்.

- Advertisement -

வெயில் எட்டிப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதத்தை இந்த வெயில் உறிஞ்சி விடும். முதல் சில ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பொறுமையாக விளையாடி பிறகு ரன் குவிக்க வேண்டும் என்று கூறினார். இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் இரண்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் , ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளனர். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக தீபச்சாகர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் விளையாடுகிறார்.

விராட் கோலி இடத்தில் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் விளையாடுவார் என தெரிகிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி நேற்று ரசிகர்கள் கடும் கோபத்தில் பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு மட்டுமே விளையாட வாய்ப்பு கொடுப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டி டிரெண்ட் செய்தனர். ஸ்ரேயாஸ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் என நடுவரிசை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது தீபக் ஹூடாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீனியர்கள் இல்லாமல் இந்திய அணி இந்தத் தொடரில் களமிறங்கியுள்ளது. அறிமுக வீரர்களான ஆர்ஸ்தீப், உம்ரான் ஆகியோர் எப்படி செயல்பட போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.நியூசிலாந்து அணியில் வில்லியம்சனுக்கு இந்த தொடர் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு வில்லியம்சன் வெறும் ஆறு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.அதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 56வது தான் இருந்துள்ளது.இந்த போட்டியில் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றினால் ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடிக்கும்.