ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் டி20 ஸ்குவாடில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளது.
அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (வைஸ் கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காயத்தில் இருந்து மீண்டு வரும் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரின் பங்கேற்பு பிட்னஸ் சான்றிதழைப் பொறுத்தது என்று பிசிசிஐ தரப்பில் பேசும்போது “ஹர்திக் பாண்டியா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் “ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு பெறாத சஞ்சு சாம்சன் மீண்டும் விக்கெட் கீப்பர் பேட்டராக அணிக்கு திரும்பியுள்ளார்” என்று கூறி இருக்கிறார்கள்.






