அதாங்க எனக்கும் புரியல.. ரோகித் சர்மா குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

0
407

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பெரிய இன்னிங்ஸ் ஏன் ஆடவில்லை என்று எனக்கு புரியவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் விராட் கோலி விளையாடும் போது பார்மில் இல்லாதது தெரிந்தது. அதனால் தான் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய ரன்களை அடிக்கவில்லை.

- Advertisement -

ஆனால் ரோஹித் சர்மா அப்படி இல்லை. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். இலங்கைக்கு எதிரான மூன்று நாள் போட்டிகள் ,நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் கூட பவுண்டரி , சிக்ஸர் என்று அடிக்கிறார். ஆனால், அவரால் ஏன் 30 ,40 ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் அடிக்கும் வரை ரோஹித் சர்மா சதம் அடிக்காதது குறித்து எனக்கு கவலை இல்லை.

ஆனால் ரோகித் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் எந்த நெருக்கடியும் இருக்காது. ரோகித் சர்மா அடிக்கும் 30,40 ரன்களை அவர் 60, 70 ரன்களுக்கு அதனை மாற்ற வேண்டும். விரைவில் அந்தப் பணியை செய்வார் என நம்புகிறேன். ரோகித் சர்மாவை சதங்கள் தவிர்த்து வருகிறது அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ரோகித் சர்மா விரைவில் சதம் அடிப்பார் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் அவர் பேட்டிங் செய்யும்போது ஃபார்மல் இல்லாதது போல் தெரியவில்லை.

அவர் பந்தை அடிப்பதில் எந்த சிரமத்தையும் காட்டவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கூட ரோகித் சர்மா சதம் அடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். அதன் பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாச வில்லை .

- Advertisement -

அவர் நல்ல பார்மல் இருப்பதால் விரைவில் அந்தக் குறையை நீக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.