இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து சிறப்பான நிலையில் இருந்தாலும் அந்த அணியின் வெற்றியை இந்திய கேப்டன் முற்றிலுமாக தடுத்து நிறுத்தினார்.
இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இல்லாமல் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கூறும் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்து இருந்தார். மேலும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மாவிடம் ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது சற்று கோபமாகவே அந்த ஃபார்மேட் வேறு இந்த ஃபார்மேட் வேறு என்று பதில் அளித்தார்.
இந்த சூழ்நிலையில் முதல் ஒருநாள் போட்டியிலும் இரண்டு ரன்னில் வெளியேறிய நிலையில் பெரிய அழுத்தத்திற்கு உள்ளானார். மேலும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக 304 ரன்கள் குவித்திருந்தபோது இன்னும் அதிக அளவு அவர் மீது எதிர்பார்ப்பும் அழுத்தமும் உருவானது. இதை அப்படியே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா 119 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்டதோடு தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழ்நிலையில் இதுகுறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியாவில் பெரிய பிராண்டுகளாக இருப்பவர்கள், எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணர்கிறார்கள். உலகக் கோப்பையின் போது அவர் 40 மற்றும் 50 ரன்கள் அடிப்பது மட்டுமல்ல எங்கோ ஒரு சதமும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சதம் நீங்கள் ஃபார்மில் இருக்கிறீர்கள் என்பதற்கான ஒரு சான்றிதழ் போன்றதாகும். இந்த ஃபார்மேட் அந்த குரங்கை உங்கள் முதுகில் இருந்து எடுப்பதற்கு அனுமதி அளிக்கிறது. அவர் அதை செய்த விதத்தை பார்த்தீர்கள் உலகக்கோப்பையின் போது அவர் தாக்குதல் நடத்தவில்லை.
இதையும் படிங்க:நம்பிக்கையோடு இருந்தேன்.. அவர் செஞ்ச சம்பவத்தால எல்லாமே மாறிடுச்சு.. ரொம்ப சோதிக்கிறாரு – ஜாஸ் பட்லர் பேட்டி
ஆனாலும் அவர் தனது இன்னிங்ஸை வேகப்படுத்த முயற்சிக்கும்போது அதை எப்படி எளிதாக செய்கிறார் என்பது முற்றிலும் நம்ப முடியாத விஷயமாகும். அவர் தனது ஷாட்கள் விளையாடும் விதத்தில் மிகவும் தேர்ந்தெடுத்தவராக இருக்கிறார். இப்போது இறுதியாக அந்த கேள்விக்கு பதிலும் கிடைத்துள்ளது. அடுத்த போட்டியில் அவர் அணிக்கு நல்லது என்று நினைக்கும் இடத்தில் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வெளிப்படையாக அணி வெற்றி பெற வேண்டும் என்று ரோஹித் செய்த விஷயமாகும். ஆனால் அது தனக்கானது என்று அவர் கூறுவார்” என பேசி இருக்கிறார்.