ரோகித் சர்மா முன் காத்திருக்கும் சவால்கள்.. சஞ்சய் பங்கர் சொன்ன 2 விசயம்

0
44

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா தான் வெல்லும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கணித்துள்ளனர். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு இரண்டு பெரிய சவால் காத்திருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 28ஆம் தேதி எதிர்கொள்கிறது.

- Advertisement -

கடந்த சில தொடர்களில் இடம்பெறாத விராட் கோலி , கே.எல் ராகுல் ஆகியோர் தற்போது அணிக்கு திரும்பியுள்ளனர். இது இந்திய அணியின் பலமாக பார்க்கப்பட்டாலும், யாரை அணியில் சேர்ப்பது ?யாரை அணியை விட்டு நீக்குவது? என்ற குழப்பத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சஞ்சய் பங்கர் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் பலமாக விளங்கினாலும் ரோகித் சர்மாவுக்கு இரண்டு முக்கிய சவால்கள் காத்திருப்பதாக கூறினார்.

கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி அணிக்கு திரும்பி இருப்பது பேட்டிங் பலத்தை அதிகப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள சஞ்சய் பங்கர், எனினும் இவ்விரு வீரர்களும் காயத்திலிருந்து திரும்பியுள்ளதால் அவர்களை அணியில் எவ்வாறு ரோகித் சர்மா பயன்படுத்துவார் என்பதை கவனிக்க வேண்டி இருப்பதாக கூறியுள்ளார். மேட்ச் ப்ராக்டிஸ் இல்லாமல் இருவரும் இருப்பது அணிக்கு பின்னடைவாக அமையலாம் என்பதையே சஞ்சய் பங்கர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

அதே பேட்டியில் தொடர்ந்து பேசிய சஞ்சய் பங்கர் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடைவைதான் ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது பும்ரா இல்லாமல் ரோகித் சர்மா எவ்வாறு அணியை வழி நடத்துகிறார் என்பதை அவருக்கு சவாலாக தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். சஞ்சய் பங்கரின் கருத்து கவனிக்க வேண்டியவை என்றாலும் ரோகித் சர்மாவுக்கு பெரிய தலைவலியாக இருக்கப் போவது கே எல் ராகுலை பிளேயிங் லெவனில் எந்த இடத்தில் சேர்ப்பது என்பதாகத்தான் இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் கே எல் ராகுலுக்கு தொடக்க வீரராக ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினால் தினேஷ் கார்த்திக் அல்லது வேறேனும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு இந்தியா போட்டியில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்படும்.இதனால் ரோகித் சர்மா என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.