இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் ஐயர் இப்ப இத செஞ்சா பிரச்சனையாயிடும்.. கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும் – சஞ்சய் பாங்கர் அறிவுறுத்தல்

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த நிலையில் அணிக்கு திரும்பி வந்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து முக்கியமான ஒரு கருத்தை சஞ்சய் பாங்கர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டு தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணியில் இணைந்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் ஐயர் இதை செய்ய வேண்டும்

கடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் மண்ணீரலில் காயம் அடைந்தார். மிக மோசமான காயமாக சென்று இருக்க வேண்டிய சூழ்நிலையில் உடனடியாக மருத்துவமனையை நாடியதால் பெரிய ஆபத்திலிருந்து தப்பி வந்திருக்கிறார். தற்போது அணிக்குள் வந்ததுடன் துணை கேப்டன் ஆகவும் தொடர்கிறார்.

இது குறித்து சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “தற்போது காயத்தில் இருந்து திரும்பி வந்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கும் ஒரே ஒரு ஆபத்து என்னவென்றால், அவர் உடனடியாக அவசரப்பட்டு ஆரம்பித்து நன்றாக பங்களிப்பு கொடுக்கலாம் என்று நினைக்கலாம். இதைத்தான் ஸ்ரேயாஸ் ஐயர் கவனத்தில் கொண்டு கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். அவர் உள்நாட்டு அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டை சிறப்பாக புரிந்து கொண்டிருக்கிறார்”.

- Advertisement -

கில் கொஞ்சம் காலம் ஆகும்

“ஸ்ரேயாஸ் ஐயர் பல வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வருகிறார். 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடிய விதம் விருந்தாக இருந்தது. சுழல் பந்து வீச்சுக்கு எதிராக விருந்தாக இருக்கிறது. காயத்துக்கு பிறகு திரும்பி வந்து அவருடைய இடத்தையும் பிடித்திருக்கிறார்”

இதையும் படிங்க: நியூசி தொடர்.. கடைசி நேரத்தில் நட்சத்திர இந்திய காயத்தால் விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.. என்ன நடந்தது?

“கேப்டன் பொறுப்பில் கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நன்றாக செயல்பட்டு இருந்தார். மேற்கொண்டு ஆஸ்திரேலியா தொடர் கடினமாக அமைந்திருந்தது. தற்போது இந்திய மண்ணிற்கு திரும்பி வந்திருக்கிறார். அவர் கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படுகிறார் என உடனடியாக சொல்லி விட முடியாது. மேலும் அவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Shreyas Iyer