ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கப் போகிறார் – சஞ்சய் பங்கர்

0
278
Ab de Villiers and Sanjay Bangar

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி என்றாலே நம் நினைவுக்கு வருவது விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் தான். அந்த அளவுக்கு அந்த அணியில் அவர்கள் இருவரது ஆதிக்கம் சமீப சில வருடங்களில் இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஏபி டிவிலியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர் மூலமாகவும் கவரப்பட்ட ஒரு பேட்ஸ்மேன். அதிரடியான கிரிக்கெட்டிங் ஷாட்கள், மிரள வைக்கும் ஃபீல்ல்டிங் திறமை என அனைத்து ரீதியிலும் சிறந்த வீரர் அவர்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் டி20 தொடரில் விளையாடி வந்தார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக இந்த ஆண்டு வரை விளையாடி வந்தார். நிச்சயமாக அவர் மேலும் 2-3 ஆண்டுகள் பெங்களூரு அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை விடுத்தார். இந்த செய்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் சோகமடைய செய்தது.

- Advertisement -

மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் சில நாட்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்டார். தற்பொழுது அவர் ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் களமிறங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கண்டிப்பாக ஒரு வீரராக அவர் மீண்டும் பெங்களூரு அணியில் களமிறங்கும் போவதில்லை என்றாலும், பயிற்சியாளராக அவர் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஏதேனும் ஒரு பயிற்சியாளராக குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளராக அவர் தனது பணியை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சஞ்சய் பங்கர் கூறிய இந்த வார்த்தைகள் அனைத்து பெங்களூர் அணி ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டும் ஏபி டிவில்லியர்ஸ் 156 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4491 ரன்கள் குவித்துள்ளார். அதில் 2 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியில் விளையாடிய அவரது பேட்டிங் ஆவெரேஜ் 41.20 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 158.64 என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -