ஆசியக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பயிற்சியாளர் கம்பீர் வித்தியாசமான ரோலை தரலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கேரள டி20 லீக்கில் சஞ்சு சாம்சன் வித்தியாசமான ரோலில் விளையாடி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆசியக் கோப்பை டி20 இந்திய அணியில் கில் மீண்டும் இடம் பிடித்ததோடு துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். எனவே அவர் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக வருவார் என்பது உறுதியாகிவிட்டது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு தற்போது மேல் வரிசையில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அகர்கர் வெளிப்படை பேச்சு
இந்த நிலையில் ஆசியக் கோப்பை அணி அறிவிப்பின்போது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் டெஸ்ட் போட்டிகளில் வில் பிஸியாக இருந்த காரணத்தினால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், அவர் திரும்பி வந்து விட்டதால் அந்த வாய்ப்பு மீண்டும் கொடுக்கப்படாது என்பதையும் கூறியிருந்தார்.
மேலும் ஆசியக் கோப்பை இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக மிடில் வரிசையில் விளையாடக்கூடிய ஜிதேஷ் சர்மா இடம் பெற்றிருக்கிறார். எனவே அவரை லோயர் மிடில் ஆர்டரில் இறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சஞ்சு சாம்சன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் வாய்ப்பு கொடுக்கப்படாமலும் போகலாம்.
தற்போதைய புதிய ரோல்
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் கேரள டி20 லீக்கில் திடீரென சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் தன்னை ஐந்தாவது இடத்திற்கு கீழே இறக்கி கொண்டிருக்கிறார். கம்பீர் அவரை கீழே விளையாட சொல்லி இருக்கலாம், அதன் மூலம் ஆசிய கோப்பையில் ஐந்தாவது இடத்தை அவருக்கு கொடுக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஹாட்ரிக் சிக்ஸர்.. 48 பந்தில் ரிங்கு சிங் ருத்ர தாண்டவம்.. மிரட்டல் பேட்டிங்.. கம்பீருக்கு மகிழ்ச்சியான செய்தி..
அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் ஐந்து போட்டிகளில் 132 ஸ்ட்ரைக் ரேட்டில் 62 ரன்கள், ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவருக்கு கீழ் வரிசையில் விளையாடுவது சரிவராது. எனவே ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு யார் விக்கெட் கீப்பராக இருக்கப் போகிறார்கள்? என்ற பெரிய சந்தேகம் எழுந்திருக்கிறது.






