சேவாக்குக்காக பழி தீர்க்க நினைத்த சமி; மன்னித்துவிட்ட ரோஹித் சர்மா!

0
3540

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பரஸ்பர ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 373 ரன்கள் எடுத்திருந்தது இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரண்களை எடுத்தது, இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது .

இந்திய அணியின் தரப்பில் விராட் கோலி சிறப்பாக ஆடி 113 ரண்கள் எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 83 ரண்களும் சுப்மன் கில் 71 ரண்களும் எடுத்தனர் . இலங்கை அணியின் தரப்பில் கேப்டன் சனக்கா 108 ரண்களும் நிசான்கா 72 ரண்களும் எடுத்தனர் . உம்ரான் மாலிக் 3 விக்கெட்களையும் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தப் போட்டியின் இறுதி ஓவரின் நான்காவது பந்தை வீச வந்த முகமது சமி தசுன் சனக்காவை மன்க்ட் முறையில் ரன் அவுட் செய்தார். பின்னர் கேப்டன் ரோகித் சர்மா உடன் ஆலோசனை செய்துவிட்டு இருவரும் அவுட்டிற்கான முறையீடை கைவிடுவதாக அறிவித்தனர் . அப்போது சனக்கா 98 ரன்கள் ஆடிக்கொண்டிருந்தார் . பிறகு ஓவரின் ஐந்தாவது பந்தில் தனது சதத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா மற்றும் சமியின் இந்த முடிவை கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என பாராட்டு வருகின்றனர்.

2010 ஆம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியின் போது இந்திய அணிக்கு வெற்றி பெற ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் விரேந்தர் சேவாக் 99 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சுராஜ் ரந்திவ் வீசிய பந்தை சிக்ஸ் விலாசிய சேவாக் தான் சதம் அடித்த மகிழ்ச்சியை ஆடுகளத்தில் கொண்டாடினார் . அந்த பந்து நோபல் ஆக வீசப்பட்டதால் சேவாக் அடித்த சிக்ஸர் அவரது ரண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது. அதன் காரணமாக அவர் 99 ரன்கள் உடனே ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது .இதனால் கோபம் அடைந்த சேவாக் மைதானத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆட்டத்திற்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அந்த ஒரு ரண்ணை நோபாலாக வீசி வேண்டுமென்றே வீரந்தர் சேவாக் சதம் அடிப்பதை தடுத்திருந்தது இலங்கை அணி . நேற்றைய சம்பவத்திற்கு பிறகு இந்தப் போட்டியை நினைவுபடுத்தி ரசிகர்கள் இந்திய வீரர்களின் ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பை கொண்டாடி வருகின்றனர் .