கேப்டனை மாற்றினீர்களே? வெற்றி பெற்றீர்களா? – பிசிசிஐ க்கு பாக்.வீரர் கேள்வி

0
623

இந்திய அணியின் கேப்டனை மாற்றினீர்களே உலகக் கோப்பையை வென்றீர்களா என்று பிசிசிஐக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் கேள்வி எழுப்பி உள்ளார். டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தேர்வு குழுவை பிசிசிஐ கலைத்தது. இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை விளையாட சென்ற நீங்கள் ஏன் வேகப்பந்து வீச்சாளரை அழைத்துச் செல்லவில்லை.

நீங்கள் பெர்த் மற்றும் மெல்போர்ன் போன்ற மைதானத்தில் விளையாடும் போது ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும். பிசிசிஐ விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய போது அவர்கள் தெளிவான காரணத்தை சொல்லவில்லை. ஐசிசி கோப்பையை கோலி வெல்லவில்லை என்று சொன்னார்கள். நான் கேட்கிறேன் சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனை கேப்டன்கள் ஐசிசி கோப்பையை வென்று இருக்கிறார்கள்.

Salman butt

பலபேர் கோப்பையை வெல்லாமல் தங்களது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். சரி கேப்டனை மாற்றினீர்களே இப்போதாவது நீங்கள் கோப்பையை வென்றீர்களா? விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு சென்ற பிறகு இந்திய அணியில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. உங்களுக்கு வெற்றி பெறும் கேப்டன் தான் வேண்டும் என்றால் நீங்கள் தோனியையே கேப்டனாக போட்டு விளையாட வைத்திருக்கலாம் அல்லவா? அவரும் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார்.

கேப்டனாக விராட் கோலி இருந்த போது சிறப்பான செயல்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் ஐசிசி கோப்பையை வெல்லாதது துரதரிஷ்டமே. விராட் கோலி கோப்பை வெல்லாததற்கான காரணம் குறித்து பிசிசிஐ யோசித்து அதற்கு முடிவு எடுத்திருக்க வேண்டுமே தவிர , விராட் கோலியை நீக்கியது மிகவும் தவறான முடிவு.

கேப்டன் பதவியில் இருந்து சென்ற பிறகு விராட் கோலியின் பேட்டிங் ஃபார்மும் பாதிக்கப்பட்டது.அவர் மனதளவில் நிச்சயம் பாதிக்கப்பட்டு இருப்பார். விராட் கோலிக்கு இந்த நிலைமை என்றால் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் தங்கள் இடம் குறித்தும் அச்சம் ஏற்பட்டிருக்கும் என்று சல்மான் பட் கூறினார்