ஜிம்பாப்வே தொடர்.. முக்கிய இந்திய வீரர்களுக்கு பதிலாக 3 பேர் சேர்ப்பு.. உலக கோப்பையால் வந்த சிக்கல்

0
1349

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பையை வென்றுள்ள நிலையில் அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இதில் ஜிப்பாப்வே தொடர்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஐபிஎல்லில் கலக்கிய மூன்று வீரர்களும் ஜிம்பாவேவிற்க்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான மூன்று வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்திய மூத்த சீனியர் வீரர்கள் இந்த டி20 உலக கோப்பையை வென்றுள்ள நிலையில், அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாவேவில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.இதில் நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கிய அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், ருத்ராஜ் ஆகியோர் ஜிம்பாப்வே தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இளம் வீரர்களான நடப்பு டி20 உலக கோப்பைத் தொடரில் விளையாடிய சிவம் தூபே சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயர்களும் ஜிம்பாப்வே தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த மூன்று வீரர்களும் ஏற்கனவே இந்திய அணியுடன் இணைந்து இருக்க வேண்டும். ஆனால் டி20 உலக கோப்பையை முடித்த பின்னர் பார்படாசில் பெரிய சூறாவளியின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் இந்தியா திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கிய சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா மற்றும் ஜித்தேஷ் ஷர்மா ஆகிய மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா தற்போது இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் அறிமுகமாகி விளையாடிய சாய் சுதர்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய வீரர்களும் தற்போது இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். அந்த மூன்று வீரர்களுக்கு பதிலாக இவர்கள் மூவரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இதையும் படிங்க:2026 டி20 உலக கோப்பை.. தப்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.. தகுதி பெற்ற அணிகளை அறிவித்த ஐசிசி

இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்பியதும் மற்ற மூன்று வீரர்களும் ஜிம்பாப்வேவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்திய டி20 கிரிக்கெட் அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், துருவ் ஜூரல் (WK), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (WK) , ஹர்ஷித் ராணா.