இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் குஜராத் நட்சத்திர பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி மிகவும் சிறப்பான முறையில் விளையாட வருகிறது. இன்னொரு பக்கத்தில் லக்னோ அணிக்கு நல்ல பவுலிங் யூனிட் இல்லை என்றாலும் அதிரடியான பேட்டிங் மூலம் போட்டிகளை வென்று வருகிறது. எனவே இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மிகவும் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த குஜராத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் இருவருமே அரை சதம் அடித்து அசத்தினார்கள்.
மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 60 ரன்கள் எடுத்தார். இணைந்து விளையாடிய சாய் சுதர்சன் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 56 ரன்கள் எடுத்தார். இவர்களுக்கு அடுத்து ரூதர்போர்டு 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு குஜராத் 180 ரன்கள் எடுத்தது. சர்துல் தாக்கூர் மற்றும் ரவி பிஸ்னாய் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் 5 போட்டிகளில் மூன்று அரை சதங்களுடன் 288 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைவசம் வைத்திருந்தார். இன்றைய போட்டியில் சாய் சுதர்சன் அரைசதம் அடித்ததன் மூலம், ஆறு போட்டிகளில் நான்கு அரை சதங்களுடன் 329 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க : கடைசி 10 ஐபிஎல் இன்னிங்ஸ்.. சாய் சுதர்சன் செய்த மாஸ் சம்பவம்.. பூரனை தாண்டி அசத்தல்
மேலும் சாய் சுதர்சன் தன்னுடைய கடைசி பத்து ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 65(39), 84(49), 6(14), 103(51), 74(41), 63(41), 49(36), 5(9), 82(53), 56(37) ரன்கள் என மொத்தம் ஏழு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருக்கிறார். இதில் இரண்டே முறை மட்டும் அவர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி இருக்கிறார். தற்போது அவருடைய பேட்டிங் விராட் கோலி அளவுக்கு மிகவும் சீராகவும் அதிரடியாகவும் இருந்து வருகிறது.