“4 ஓவர், 3 மெய்டன், 2 ரன், 4 விக்கெட்” – சாய் கிஷோர் அபார பந்துவீச்சு

0
245
20220723_131625

இந்தியளவில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் போல, தமிழக அளவில் தமிழக கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி.என்.பில் தொடராகும். இந்த வருடம் ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் இறுதிபோட்டியோடு தொடர் முடிவு பெறுகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் கலந்துகொள்கின்றன. 2016 முதல் நடுவில் கொரோனோ தொற்றுக் காரணமாக 2020ஆம் ஆண்டு மட்டுமல்லாமல், இந்த ஆண்டோடு, ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2017, 2019, 2021ஆம் ஆண்டுகளில் மூன்று முறை பட்டம் வென்று, அதிகமுறை பட்டம் வென்ற அணியாக இருக்கிறது!

- Advertisement -

இந்தத் தொடரில் நேற்று 25வது போட்டியில் ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணியின் கேப்டன் எம்.முகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்!

இதன்படி சேப்பாக் கில்லீஸ் அணிக்கு பேட்டிங்கில் துவக்கம் தர கேப்டன் கவுசிக் காந்தியும், நாராயண் ஜெகதீசனும் களம்புகுந்தார்கள். ஆனால் துவக்க வீரர்கள் 2, 0 என பெவிலியன் திரும்பினார்கள். ராதா கிருஷ்ணன் 24 [18], உத்திரபதி சசிதேவ் 45 [29] என கைக்கொடுக்க சேப்பாக் அணி இருபது ஓவர்கள் முடிவில் 133/9 ரன்கள் சேர்த்தது. திருப்பூர் தரப்பில் அஸ்வின் கிறைஸ்ட் நான்கு ஓவர்களில் முப்பது ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்துக் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு இரண்டு இலக்க ரன்கள் அடித்தது மூன்று வீரர்கள்தான். முறையே 25, 11, 10. மீதி எட்டு வீரர்களும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. 19.3 ஓவர்களில் 73 ரன்களுக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஆல் அவுட்டானது. சேப்பாக் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக் தரப்பில் மிகச்சிறப்பாகப் பந்துவீசிய முன்னாள் சி.எஸ்.கே, இந்நாள் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரான சாய் கிஷோர் நான்கு ஓவர்கள் பந்துவீசி, மூன்று மெய்டன்கள் செய்து, இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுதான் ஒட்டுமொத்த டி,என்.பி.எல் தொடரில் சிறந்த நான்கு விக்கெட் பந்துவீச்சு ஆகும். சாய் கிஷோரே ஆட்டநாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்!

- Advertisement -

புள்ளிப்பட்டியல்:

நெல்லை – 6 போட்டிகள் – 12 புள்ளிகள்
சேப்பாக் – 7 போட்டிகள்- 10 புள்ளிகள்
மதுரை – 6 போட்டிகள் – 8 புள்ளிகள்
கோவை – 6 போட்டிகள் – 6 புள்ளிகள்
திருப்பூர் – 7 போட்டிகள் – 6 புள்ளிகள்
திண்டுக்கல் – 6 போட்டிகள் – 4 புள்ளிகள்
திருச்சி – 6 போட்டிகள் – 4 புள்ளிகள்
சேலம் – 6 போட்டிகள் – 0 புள்ளிகள்