நான் பணத்திற்காக “கஷ்டப்படுகிறேன் என்று சச்சினுக்கு நன்றாக தெரியும். ஆனால்..” – சச்சினின் நெருங்கிய நண்பர் உருக்கமான பேட்டி!

0
5681

நான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று எனது நண்பர் சச்சின் அறிவார். ஆனால் இதுவரை யாரிடமிருந்தும் பெரிதாக உதவிகள் கிடைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

1990 களின் ஆரம்பத்தில் இந்திய அணிக்கு அறிமுகமான வினோத் காம்ப்ளி, ஏழு டெஸ்ட் போட்டிகள் விளையாடி 793 ரன்கள் அடித்து 110க்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார். இதில் இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும். மிகத் திறமையான கிரிக்கெட் வீரர் என்றாலும் கவனச்சிதறல் காரணமாக இவரால் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணியில் நிலைத்து இருக்க முடியவில்லை. அவ்வபோது வெளியே சென்று மீண்டும் உள்ளே வருவார்.

- Advertisement -

வினோத் காம்ப்ளி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமல்ல, அது ரசிகர்கள் பலரும் அறிவர். 1999க்கு பிறகு இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், கிரிக்கெட் வாழ்க்கையில் இவரது பங்களிப்பு என்ன என்று யாருக்கும் தெரியாமலே போனது. இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த உருக்கமான பேட்டியில், வருமானத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் பொருளாதார ரீதியாக மிகுந்த பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும் பலரது உதவிகளை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை என்றும் பேசியுள்ளார்.

வினோத் காம்ப்ளி கூறுகையில், “பிசிசிஐ எனக்கு ஓய்வூதியமாக மாதம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது இதுதான் என் குடும்பத்திற்கு மற்றும் என் குழந்தைகள் படிப்பிற்கு தற்போது வரை உதவி வருகிறது அதற்காக நான் பிசிசிஐக்கு கடமைப்பட்டுள்ளேன். அதே நேரம் இது மும்பை போன்ற நகரங்களில் போதாது என தெரியும். ஆகையால் கூடுதலாக வருமானம் ஈட்டுவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியம் உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மும்பை கிரிக்கெட் வாரியத்தில் வேலை கிடைத்தால் பொருளாதார பிரச்சனையை சரி செய்து கொள்வேன்.

மும்பை அணியின் தலைமை கோச் அமுல் மசூம்தார் இருக்கிறார். அணியை நல்ல விதமாக வழி நடத்திச் செல்கிறார். எனக்கு கிரிக்கெட்டை மேம்படுத்தும் குழுவில் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு கவுரவ பதவி. இதற்கு சம்பளம் கிடையாது. ஓரளவுக்கு ஊதியம் கிடைக்கும் வேலையை எதிர்பார்க்கிறேன். மும்பை கிரிக்கெட் வாரியம் எனக்கு நிறைய செய்திருக்கிறது. தற்போது இந்த உதவியும் செய்து கொடுத்தால் நான் மட்டுமல்லாது என் குடும்பமும் நல்ல நிலைக்கு வரும்.” என்றார்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உள்ளூர் டி20 லீக் தொடரில் ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளராகவும் இவர் இருந்தார். மேலும் சச்சின் டெண்டுல்கர் நடத்தி வந்த கிரிக்கெட் அகாடமியில் இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு இவர் எடுக்கப்பட்டார். அதன் பிறகு சில காரணங்களுக்காக அவர் அதிலிருந்து விலகினார். தற்போது வரை சச்சின் உடன் நல்ல நட்புறவில் இருக்கிறார். ஆனால் சச்சின் போதிய பண உதவி செய்யவில்லை என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

” சச்சினுக்கு எனது பொருளாதார நெருக்கடி பற்றி நன்றாக தெரியும். ஆனாலும் நான் அவரிடம் தற்போது வரை எதுவும் எதிர்பார்க்கவில்லை. உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளவும் இல்லை. அவர் எனக்கு தனது அகடமியில் பயிற்சியாளர் வேலை போட்டுக் கொடுத்தார். ஆனால் எனது ஊரில் இருந்து அங்கு செல்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதால் அந்த வேலையில் இருந்து நான் விலகி விட்டேன். ஆனால் நான் அவருடன் இருந்தவரை நன்றாக பணி புரிந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று சச்சினுக்கு நன்றாக தெரியும். பள்ளி பருவத்தில் நான் வேறொரு பள்ளியில் படித்திருந்தேன். அப்போது சச்சின் பள்ளிக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவோம். அப்போதுதான் நானும் அவரும் நண்பர்களாக ஆனோம் என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.