ஓய்வு பெற்ற நியூசிலாந்தின் ரோஸ் டெய்லருக்கு இதயப்பூர்வமான செய்தி அனுப்பிய சச்சின் டெண்டுல்கர்

0
106
Sachin Tendulkar and Ross Taylor

நியூசிலாந்து கிரிக்கெட் என்று பார்த்தால் இன்றைய தலைமுறையினருக்கு மெக்கல்லம், வில்லியம்சன், போல்ட், டிம் சவுதி தாண்டி பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை. மார்டின் க்ரோவ், ரிச்சர்ட் ஹாட்லீ என்று வந்து ஸ்டீபன் பிளமிங் கைகளில் பல ஆண்டுகள் நியூசிலாந்து கிரிக்கெட் இருந்தது. பின்பு மெக்கல்லம், கனே வில்லியம்சன் என்று மாறி வந்திருக்கிறது.

கனே வில்லியம்சனின் உலக சமாதான தூதர் போன்ற செயல்பாடுதான் நியூசிலாந்து கிரிக்கெட்டின் வழமையா என்று கேட்டால் கிடையாது. அவர்கள் அவர்களின் அண்டை நாடான, கண்டமான ஆஸ்திரேலியாவின் ஆக்ரோச கிரிக்கெட்டையே பின்பற்றியவர்கள். மெல்ல மெல்ல மெக்கல்லம் மூலமாக ஆட்டத்தில் அதிரடி, எதிரணியின் உடன் அடக்கம் என மாறி, இன்று வாழும் இயேசுநாதர் வில்லியம்சனின் கருணை மிகுந்த, பாவ மன்னிப்பு அளிக்கும் முகம்தான், நியூசிலாந்தின் கிரிக்கெட் முகம் என்றளவில் வரலாறு நேரெதிராய் மாறியிருக்கிறது.

- Advertisement -

மக்கள் தொகையில் வெறும் 50 லட்சம் மக்களைக்கொண்ட நியூசிலாந்து ஐ.சி.சி தொடர்களில் எப்போதுமே முன்னணி அணிகளுக்குத் தலைவலிதான். கடந்து மூன்று உலகக்கோப்பை இறுதியாட்டங்களுக்கு வந்திருக்கிறது. இரண்டு முறை இந்தியாவின் உலகக்கோப்பை கனவைத் தகர்த்திருக்கிறது. இப்படியான நியூசி அணியிலிருந்து 16 வருடங்கள் விளையாடி, இன்று நெதர்லாந்து அணிவுடனான சொந்த மண்ணில் நடந்த, மூன்றாவது ஒருநாள் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

2007-ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுகமான ரோஸ் டைலர், ஒருநாள் போட்டிகளில் 235 ஆட்டங்களில் 8593 ரன்களோடு, மிடில் ஆர்டரில் 47.7 என்ற சிறந்த சராசரியைக் கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 112 ஆட்டங்களில் 7683 ரன்களை 44.3 சராசரியில் குவித்திருக்கிறார்.

இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுக்கொண்ட ரோஸ் டெய்லருக்கு, உலக கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுகல்கர் பாராட்டி வாழ்த்தி ட்வீட் செய்திருக்கிறார்.

- Advertisement -

அதில் “நீங்கள் கிரிக்கெட்டின் சிறந்த தூதுவராக இருந்திருக்கிறிர்கள். உங்களை எதிர்த்து விளையாடிய அருமையான ஆட்டங்கள் சிறப்பானது. கிரிக்கெட்டிற்காக நீங்கள் உங்களை மாற்றிக்கொண்ட விதம், இளம் வீரர்களுக்குப் பாடமாகவும், உத்வேகமாவும் இருக்கக்கூடியது. உங்களது அருமையான கிரிக்கெட் பயணத்திற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்” என தெரிவித்திருக்கிறார்!