எனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடும் போது நான் அதைப் பார்க்க மாட்டேன் ; காரணம் இதுதான் – சச்சின் டெண்டுல்கர் வெளிப்படைப் பேச்சு

0
3109
Sachin Tendulkar and Arjun Tendulkar

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் அன்று முதல் இன்றுவரை உலக அளவில் அனைவராலும் ரசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர்களை ஆடிய சமயத்தில் அவர் படைத்த சாதனைகளை இன்றும் முழுமையாக எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் முறியடிக்கவில்லை. அதற்குள் அவரது 22 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் படிப்படியாக தன் கிரிக்கெட் கேரியரை வலுப்படுத்தி வருகிறார்.

இந்திய அணிக்காக அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது மும்பை அணிக்காக டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சையது முஷ்டாக் அழி டிராபி தொடரில் மும்பை அணிக்காக தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார். முதல் போட்டியில் 3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி 34 ரன்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடுவார்.

- Advertisement -

30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜுன் டெண்டுல்கர்

நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை 30 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியது. இதற்கு முன்னரும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

என் மகன் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை நான் பார்க்க மாட்டேன்

சமீபத்தில் பேசியுள்ள அர்ஜுன் டெண்டுல்கரின் தந்தை சச்சின் டெண்டுல்கர் “எனது மகன் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை நான் அவ்வளவாக நேரில் சென்று பார்க்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

நான் அவ்வாறு சென்று எனது மகன் விளையாடுவதை நேரில் பார்ப்பதன் மூலம், அவருக்கு பதட்டம் ஏற்படலாம். அவருடைய கவனம் சிதற நான் காரணமாக இருக்க விரும்ப மாட்டேன். நான் ஒரு போட்டியில் விளையாடி கொண்டிருக்கும் நிலையில் என்னை மற்றவர்கள் பார்ப்பதை விரும்ப மாட்டேன்.

- Advertisement -

எனவே முடிந்த வரை நான் அவரது கண் பார்வையில் தென் பட மாட்டேன். இருப்பினும் ஒரு சில போட்டிகளை நான் காண்பது என முடிவெடுத்து விட்டால், மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டு அவர் விளையாடுவதை பார்ப்பேன். நான் அங்கு இருப்பது அவருக்கு அவருடைய அணி வீரர்களுக்கு அவ்வளவு ஏன் அவருடைய பயிற்சியாளருக்கு கூட தெரிந்திடாது. அதில் எப்பொழுதும் நான் கவனமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை கைப்பற்றுவதில் மகிழ்ச்சி

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகியான ஜாகிர்கான் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் நாங்கள் நினைத்து படி நான்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை கைப்பற்றினோம். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைப்பதன் மூலம் மூலம் போட்டியில் நமக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்பொழுது 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டைமண் மில்ஸ், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வீரரான டேனியல் சாம்ஸ் மற்றும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.