கோலியை விட சச்சின் தான் பெஸ்ட் – 3 காரணங்களை சொன்ன பாக்.வீரர்

0
315

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை அதிவேகமாக விராட் கோலி கடந்து வருகிறார். இதன் காரணமாக விராட் கோலி தான் இதுவரை விளையாடியதில் சிறந்த பேட்ஸ்மேன் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இது தவறான எடுத்துக்காட்டு என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சக்லின் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளதை தற்போது பார்க்கலாம். உலகத்திலே சிறந்த பேட்ஸ்மேன் என்று ஒருவரை சொன்னால் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே சச்சினின் பெயரை தான் சொல்லும். கிரிக்கெட்டில் இருக்கும் எந்த ஷாட்டை ஆடினாலும் சச்சினின் ஆட்டத்தை தான் எடுத்துக்காட்டாக சொல்வார்கள்.

மாறாக விராட் கோலியின் ஷாட்களை யாரும் சொல்ல மாட்டார்கள். விராட் கோலி தற்போதைய உலகில் வேண்டுமென்றால் ஜாம்பவானாக இருக்கலாம். ஆனால் சச்சின் பெரிய பெரிய ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டவர். ஆனால் இப்போது உள்ள பந்து வீச்சாளர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். விராட் கோலி வசீம் அக்ரம், மெக்ராத் வார்னர், வால்ஸ், ஆம்ப்ரூஸ் முரளிதரன் போன்ற வீரர்களை எதிர்கொண்டிருக்கிறார்களா?

இந்த வீரர்கள் எல்லாம் பேட்ஸ்மேனை எப்படி சிக்க வைக்க வேண்டும் என்று நன்றாக தெரியும். கிரிக்கெட் உலகில் மொத்தம் இரண்டு வகையான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர் எப்படி ரன்களை கட்டுப்படுத்த வேண்டியது என்று தெரியும். மற்றொருவர் தான் உங்களை எப்படி ஆட்டம் இழக்க வைப்பது என்று தெரியும்.

- Advertisement -

இதேபோன்று தற்போதுள்ள பேட்ஸ்மேனில் விராட் கோலி விட பாபர் அசாம் சிறப்பாக விளையாடுவதாகவும் சக்லின் முஸ்தாக் கூறியுள்ளார். பாபர் அசாம் விளையாடும் ஷாட்களில் பார்க்க அவ்வளவு லட்சணமாக இருக்கும் என்றும், பாபரின் கவர் ட்ரைவ் கோலியை விட சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
முஸ்தாக்கின் காரணம் ஏற்றுக்கொள்ள வகையில் தான் இருப்பதாக சச்சின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.இதே போன்று சச்சின் விளையாடும் காலத்தில் இரண்டு புதிய பந்துகள் மற்றும் பில்டர்களின் கட்டுப்பாடு விதி போன்ற எதுவும் இருக்காது.

அதேபோன்று விராட் கோலியும் ஆண்டர்சன், ஸ்டெயின், மார்க்கல் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு இருக்கிறார் என்பதையும் மறந்து விடக்கூடாது என விராட் கோலி ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 46 சதங்களுடன் உள்ளார்.முதல் இடத்தில் சச்சின் 49 சதங்களுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.